12026 – இந்து நாகரிகம்: பாகம் 3.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1997. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி லேன்).

xi, 216 பக்கம், விலை: ரூபா 140.00, அளவு: 21×14 சமீ.

க.பொ.த.ப. (உயர்தர)பரீட்சைக்குரிய இந்து நாகரிகம் -1 பாடத்திட்டம் முழுமைக்கு மான விரிவான நூல். பாடத்திட்டத்தைக் கருத்திற்கொண்ட ஆக்கம் என்ற வகையில் இந்நூல் ஒரு தொகுப்பு முயற்சியாகும். பல்வேறு ஆய்வறிஞர்கள் கண்டறிந்த முடிவுகளைப் பொருட் பொருத்தமுற இணைத்து விளக்கம் தருவது, அவ்விளக்கத்தினூடாகப் புதிய பார்வைக்கான கருத்துக்களை முன்வைப்பது ஆகியன இவ்வகை முயற்சிகளின் பொதுப்பண்பாகும். சொக்கன் அவர்கள் இவ்வகையிற் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார். இந்துப் பண்பாடு-ஓர் அறிமுகம், இந்துவெளி நாகரிகம், வேதகால நாகரிகம், ஆகமம் பிரதிபலிக்கும் பண்பாட்டமிசம், மௌரியர்கால நாகரிகம், குப்தர்கால நாகரிகமும் இந்துமத மறுமலர்ச்சியும், தமிழகத்தில் இந்துப்பண்பாடு, இந்துசமய சீர்திருத்த இயக்கம், தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு ஆகிய ஒன்பது அலகுகளில் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக சிவாகமங்கள் கட்டுரை இடம்பெறுகின்றது. இக்கட்டுரை பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ணனின் இந்துப் பண்பாட்டு மரபுகள் என்ற நூலிலிருந்து மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30194).

ஏனைய பதிவுகள்

Gold Tiger Spielbank

Silver Tiger Spielbank hat sich unter einsatz von Einzahlung 5 Holen Sie sich 25 kostenlose Spins nachfolgende Jahre hinweg event als eines das führenden Verbunden