12027 – கர்மயோகம்.

மு.ஞானப்பிரகாசம். சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1968.(சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xvi, 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

தத்துவக் கல்வியை தாமாகவே படித்துணர முன்வரும் மாணவர்களுக்காக முக்குணங்கள், சுவதர்மம், பரதர்மம் போன்ற அடிப்படைச் சமய உண்மைகளை உள்ளடக்கிய ஆரம்பச் சமயபாட நூல். பகவத்கீதையின் மூன்றாவது அத்தியாயத்தின் கர்மயோகம் தொடர்பான 43 பாடல்களையும், 14ஆம் அத்தியாயமான முக்குணப் பாகுபாட்டில் வரும் 27 பாடல்களையும் தனித்தனி அத்தியாயங்களில் விளக்கு கின்றார். பகவத்கீதையின் 3ஆம் 14ஆம் அத்தியாயங்களில் வரும் வடமொழி மந்திரங்களுக்குப் பதிலாக சேர்.பொன். இராமநாதன் அவர்கள் அம்மந்திரங்களை மொழிபெயர்த்து வழங்கிய அறிவுரைகளை ஆசிரியர் இந்நூலில் பயன்படுத்தி யிருக்கிறார். இந்நூலின் அநுபந்தமாக கர்மயோகமும்-சாங்கிய தரிசனமும், ஸ்ரீ கிருஷ்ணபகவான் அர்ச்சுனனுக்குச் செய்த உபதேசம், கர்மயோகம்-அதன் பொது நிலை, முக்குணப் பாகுபாடு, பக்தியோகம், சாங்கிய யோகம், சாங்கிய யோகம்-அதன் சார்பாக ஒரு வேண்டுகோள், அருஞ்சொற் பொருள் விளக்கம் ஆகியவை தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18906).

ஏனைய பதிவுகள்

10 Eur Prämie Bloß Einzahlung Casino 2024

Content Andere Zahlungsmethoden Hinter Angeschlossen Spielhalle Paypal Einzahlungen Spieleanbieter Slotswin Reise Um Diese Terra Ferner 25 000 Unter einsatz von Microgaming Spielend Gewinnen Er ist