12028 சிவ நடனம்: ஒரு தலைசிறந்த கலை.

நா.செல்லப்பா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2001. (சென்னை 14: பி.வி.ஆர். ஆப்செட்).

192 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 17×12 சமீ.

சைவசித்தாந்தம் சிவ நடனத்தை ஒரு நிகரற்ற சிவ கலையாக வர்ணிக்கின்றது. அத்தகைய சிறப்புடைய சிவ கலையை இந்நூல் விரிவாக விளக்குகின்றது. சிதம்பர இரகசியம், மனத்தின் அணுத்தன்மை, சிரத்தை விளக்கம், அறிவும் விவேகமும், கலை விளக்கம், புற அழகு மட்டும் உண்மைக் கலையாகுமா?, கதிர்வேலனின் விந்துக்கலை, கந்தர் அனுபூதி, தத்துவ ஞானமும் கலைஞானமும் முத்திக்கு ஏணியாகும், சிவ நடனக்கலை ஓர் ஒப்பற்ற கலை, பகுத்தறிவால் மெய்யுணர்வு பெறலாமா?, புராணத்தில் சிவநடனம், நடனத்துக்கு ராஜன் நடராஜன், சிவநடன மகிமை, சிவநடனம் காட்டும் பஞ்ச கிருத்தியம், சிவானந்த நடனம் சுட்டும் சாதனை நெறி, வைராக்கிய விசார தியான சாதனை, விதிப்படி ஓத வேண்டிய பதிநாமம், சாத்தியமான செப தியான அணுகுமுறை ஆகிய 19 இயல்களில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த ஆசிரியர், 1917 கார்த்திகை 25இல் பிறந்தவர். சுகாதார பரிசோதகராகப் பணியாற்றி 1972இல் ஓய்வுபெற்றவர். பின்னாளில் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29198).

ஏனைய பதிவுகள்