கெங்காதரானந்தஜீ (மூலம்), வே.ந.சிவராசா (தொகுப்பாசிரியர்). சென்னை 600005: குமரன் பதிப்பகம், 13/2 கஜபதி தெரு, திருநெல்வேலி, இணை வெளியீடு, கொழும்பு 12: வே.ந.சிவராசா, ஜீ.யூ.1-3, டயஸ் பிளேஸ், சிவன் கோவிலடி, 1வது பதிப்பு, ஜுன் 1992. (சென்னை 5: ஜீவன் பிரஸ்).
(4), 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
சுவாமி கெங்காதரானந்தஜீ 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் தேதியன்று பூதவுடலைவிட்டு நீங்குவதற்கு முன்பே சில அருள்வாக்குகள் ஞானமண்டலம், வஜனாமிர்தம், சுவாமி கெங்காதரானந்தஜீ அவர்களின் மணிமொழிகள், ஆலயம் ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றுள் அடங்கிய ஆலயம், கடவுள், சமயம், தருமம் ஆகியவை பற்றி சுவாமிகளின் அருளுரைகளை உள்ளடக்கிய ஒரே நூலாக இவ்வெளியீடு அமைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32217).