ஸ்ரீலஸ்ரீ சுவாமி சிவானந்தர். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1967. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்).
(4), 27 பக்கம், விலை: 25 சதம், அளவு: 18×12.5 சமீ.+
உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத் கீதை ஆகிய மூன்றும் அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பர். வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். உபநிஷ தங்கள் பல உள்ளன. அவற்றுள் நூற்றியெட்டு பொதுவாக கணக்கில் கொள்ளப்படு கின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படு கின்றன. அவை ஈச, கேன, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். ரிஷிகேசத்திலுள்ள திவ்யஜீவன சங்கத்தினால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட உபநிஷத நூலின் ஐந்தாம் அத்தியாயத்தின் தமிழாக்கமே இதுவாகும். இதில் முன்னுரை, தெய்வீக ஆதாரத்தின் அறிவு, பொருட்களின் உற்பத்தி, கர்ம ஆராய்ச்சி, அழிவில்லாததை அடைதல், ஒன்றே பலவாகின்றது, ஆன்மீக வீரனின் இலக்கு, அனுபூதியும் பிற்பாடும், ஜீவனும் ஈஸ்வரனும், ஞானத்துணைகள், முடிவான விடுதலை ஆகிய பிரிவுகளின்கீழ் முண்டகோபநிஷதம் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3016).
மேலும் பார்க்க: 13யA28