திருச்செல்வம் தவரத்தினம். யாழ்ப்பாணம்: தி. தவரத்தினம், சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, மே 2013. (யாழ்ப்பாணம்: ரூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை).
viii, 108 பக்கம், விலை: ரூபா 330., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-97102-4-0.
மானுடமும் சோதிடமும், ஜாதகப் பலன், திருமண வாழ்க்கை, விவாகப் பொருத்தம், செவ்வாய் சாதகத்தில் இருக்கும் நிலையில் தோஷமும் பரிகாரங்களும், காலதாமதத் திருமணத்திற்குரிய ஜாதகநிலை, புத்திரப் பேறு, பெண்கள் ஜாதக பலனும் ருதுபலனும், பால அரிஸ்டம், ஆயுளும் விபத்துகளும், நோய்களும் வாழ்க்கையும், மனையடி சாஸ்திரம் என்னும் வாஸ்து சாஸ்திரம், கிணறு அமைத்தல், எண் சோதிடம், ஒலி அதிர்வு சோதிடம், கைரேகை சாஸ்திரம், சாமுத்திரிகா இலட்சணம், நினைத்த காரியம் கேட்டலும் ஆரூடம் பார்த்தலும், சகுனம் பார்த்தல், நவ இரத்தின அதிர்ஷ்டக் கற்கள், உருத்திராட்சம், நல்ல காரியங்கள் செய்யக்கூடிய நட்சத்திரங்கள், பிரயாணத்திற்கு நாள் குறித்தல், தலைக்கு எண்ணெய் வைத்தலும் தலை முழுகிடலும், விருந்துண்ணல், நற்காரியங்களுக்கு தவிர்க்கவேண்டிய காலங்கள், பஞ்சாங்க விளக்கம், கிரக தத்துவங்கள், சோதிடத் துளிகள் ஆகிய 29 தலைப்புகளில் சோதிடம் பற்றிய குறிப்புகளை எளிமையான மொழிநடையில் ஆசிரியர் வழங்கியுள்ளார்.