நீர்வை தி.மயூரகிரி. யாழ்ப்பாணம்: நீர்வை தி.மயூரகிரி சர்மா, ஊடக வளங்கள் பயிற்சிகள் நிலையம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், 276 கஸ்தூ ரியார் வீதி, கன்னாதிட்டி).
xii, 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ.
நீர்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரம்மஸ்ரீ நீர்வை தி.மயூரகிரி சர்மா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இதழியல்துறையில் பயில்பவர். சமயங்களின் அடிப்படைக் கருத்துக்களை முன்வைத்து அவற்றுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகளை ஆராய்ந்து இந்நூலில் உறவின் வழியே, சமயங்களுள் உள்ளது தான் என்ன?, மதத்தை ஏன் பின்பற்ற வேண்டும், சமயங்களின் நம்பிக்கைகள் (இந்து, இஸ்லாமியம், கிறிஸ்துவம், பௌத்தம், சீக்கியம்), மகாத்மாவும் பல்சமய உறவும், நடைமுறை வாழ்வில் பல்மத உறவு, இன்றைய இந்துக்களிடையே பல்சமய உறவு, கத்தோலிக்கத்தில் பல்சமய உரையாடல்கள், சீரிய குர் ஆன் பேசும் சமரசம், உலக சமத்துவம் கூறும் கீதை, எம்மதத்திற்கும் இறைசக்தி ஒன்றே, சில சுவாரஸ்ய சமரச செய்திகள், மாறி வருகிறது அமெரிக்கா, சமரச வழியே, மதமாற்றம் என்பது? உண்மைப்பொருள்ஆகிய கட்டுரைகளின் வாயிலாக வழங்கியுள்ளார். ஒவ்வொரு சமயத்திலும் கூறப்படும் இறை அல்லது பரம்பொருள் பற்றிய கருத்துக்கள், சமய நூல்கள், சமயாசாரியார்கள், வழிபாட்டு முறைகள் என்பன பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47943).
மேலும் பார்க்க: 12191