12037 வாழ்க்கை நிகழ்ச்சிக் கோவையும் இலங்கை மிஷனின் சுருக்கமும்.

ஹரியட் வாட்ஸ்வேர்த் வின்ஸ்லோ (ஆங்கில மூலம்), மைரன் வின்ஸ்லோ (தொகுப்பாசிரியர்), வண. இரா. டா. அம்பலவாணர் (தமிழாக்கம்). சுன்னாகம்: சமூக ஆய்வுக்கான கிறிஸ்தவ மையம், கிறிஸ்தவ இறையியல் கல்லூரி, மருதனார்மடம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வட்டுக்கோட்டை: அமெரிக்கன் சிலோன் மிஷன்).

(14), 234 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

திருமதி ஹரியட் உவாட்ஸ்வேர்த் உவின்ஸ்லோ அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிக் கோவையுடன் இலங்கை மிஷன் பற்றிய சுருக்கக் குறிப்புகள் அடங்கிய இந் நூலின் ஆங்கில மூலநூலான Memoir of Mrs. Harriet Wadsworth Winslow combining A Sketch of the Ceylon Mission by Miron Winslow, 1835இல் லேவிற் லோர்ட் அண்ட் கம்பெனியாரால் (Boston: Leavitt Lord and Co) வெளியிடப்பட்டது. இந்நூல் திருமதி ஹரியட் உவாட்ஸ்வேர்த் உவின்ஸ்லோ, அமெரிக்காவில் கொனெக்டிக்கட் என்னும் இடத்தில், தான் இளைய வயதில் வாழ்ந்த காலம் தொட்டு, உடுவிலில் 1833இல் மரணப்படுக்கையடைந்த காலம் வரை எழுதிவந்த குறிப்பேட்டைக் கொண்டதாகவுள்ளது. வண. மைறன் உவின்சிலோ இலங்கை மிஷன் பற்றி எழுதிய குறிப்பும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஹரியட் அம்மையாரின் ஆழ்ந்த இறைபக்தியும், தியாக மனப்பான்மையும் அன்னாரின் அறிவுசார்ந்த திறமைகளும் இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. வண. இரா. டா. அம்பலவாணர் சுன்னாகம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் தலைவராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50717).

ஏனைய பதிவுகள்

Casinomatch Dk

Content Swift Kasino Bonus Overblik – The Invisible Man Casino Game Få 500 Kr, Spilleban Bonus Hver Weekend Kan Jeg Sejre Rigtige Gysser Foran Antipersonelmine