சகோ.ஜோன் பேரானந்தன் (இதழாசிரியர்). பிலிமத்தலாவை: தமிழ் கலாமன்றம், இலங்கை இறையியல் கல்லூரி (Theological College of Lanka), 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).
60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இலங்கை இறையியல் கல்லூரி (Theological College of Lanka) 1963 ஆம் ஆண்டு ஆங்கிலிக்க ஒன்றியம், மெதடிசம், திருமுழுக்குத் திருச்சபை, பொது ஆட்சிமுறைத் திருச்சபை ஆகியவற்றின் இணைந்த அமைப்பினால் உருவாக்கப்பட்டது. இது புதிய குருக்களை இலங்கைச் சூழ்நிலைக்கு ஏற்ப, அவர்களின் சொந்த மொழிகளான சிங்களம், தமிழ் என்பவற்றில் கற்பித்தலின் மூலம் உருவாக்குவதை நோக்காகக் கொண்டது. இக்கிறிஸ்தவ அமைப்பின் தமிழ்க் கலாமன்றத்தினர் வெளியிடும் ஆண்டிதழ் இது. இம்மலர், குருத்துவ மாணவர்களால் எழுதப்பட்ட படைப் பாக்கங்களை உள்ளடக்கியது. திரு முழுக்கும் இன்றைய நிலைப்பாடும், பரிணாமம் ஒரு பொய், நமது பண்பாட்டுக்கு உகந்த நற்கருணை வழிபாடு, திருமறையின் மையம், வாழ்வளிக்கும் வள்ளல், அன்பு, நாமே நற்செய்தியின் அருளுரைகள், மோதுவது யாருடன், குறுக்கெழுத்துப் போட்டி, அன்பும் அர்ப்பணமும், திருமறை ஆய்வு, கை கொடுத்த தெய்வம், செய்திச் சிதறல்கள், ஊழியத்தில் உறுதிபெற நற்சபை தரும் நன்மொழிகள், ஒரு குருவானவரின் குமுறல், கள்வனைப் பிடியுங்கள், தரித்திரரோடு இறைவன், நட்பால் ஒரு புதுவாழ்வு மலர்கிறது, கடவுள் இருக்கின்றாரா? விஞ்ஞானத்திற்கு ஒரு கேள்வி, அவளுக்கு ஒருஆறுதல், கலாமன்றக் குடும்பம் 97/98 ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28444).