12039 மெதொடிஸ்த சபையாரின் தேவாராதனை ஒழுங்கு.

மெதொடிஸ்த சபை. யாழ்ப்பாணம்: மெதொடிஸ்த சபை, 1வது பதிப்பு. 1935. (யாழ்ப்பாணம்: அமெரிக்கன் சிலோன் மிஷன் பிரஸ், தெல்லிப்பழை).

(4), 89 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×11 சமீ.

Methodist Church Prayer and Service Book என்ற ஆங்கில இணைத் தலைப்புடனும் வெளிவந்துள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை நூல். முக்கிய கவனிப்பு, இராப்போசன ஒய்வுநாள் ஆராதனை ஒழுங்கு, ஒய்வுநாள் ஆராதனை இரண்டாம் ஒழுங்கு, ஒய்வுநாள் ஆராதனை மூன்றாம் ஒழுங்கு, ஒய்வுநாள் ஆராதனை நான்காம் ஒழுங்கு, சங்கீதங்கள் வாசிக்கப்படும் கிரமம், விசேஷ செபங்கள், விசேஷ ஸ்தோத்திரங்கள், குழந்தைகளுக்குக் கொடுக்கும் ஞானஸ்நான முறைமை, வளர்ந்தவர்களுக்குக் கொடுக்கும் ஞானஸ்நான முறைமை ஆகிய 10 பொருட் தலைப்புகளின் கீழ் இந்த செப ஆராதனை நூல் உருவாக்கப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31790).

ஏனைய பதிவுகள்

Jack Of Diamonds

Articles Cardinals Overcome Creatures Inside the Splendid Rickwood Games How do i See Diamonds Within the Minecraft I do believe the newest error some people

17908 தங்கம் 60: மணிவிழா சிறப்பு மலர்.

மணி விழா ஏற்பாட்டுக் குழு. வேலணை: ஆறுமுகம் தங்கராஜா மணிவிழா ஏற்பாட்டுக் குழு, நவம்பர் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 180 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.  வேலணையைப்