12040 – வெற்றியின் வழி.

வண.டி.ஜீ.சோமசுந்தரம். நுகேகொடை: வண.டி.ஜீ.சோமசுந்தரம், நிர்வாக உத்தியோகத்தர், நாற்சதுர சுவிஷேச சபை, 381/1, ஹைலெவல் வீதி, கங்கொடவில, 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (வத்தளை: ஸ்கான் கிராப்பிக்ஸ், 125/9, திம்பிரிகஸ்யாய வீதி).

(2), 75 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு: 17×13 சமீ.

இந்நூலில் வெற்றி வாழ்க்கைக்கான வழி இயேசு ஒருவரே என்னும் உண்மையும், வேதத்தில் காணப்படும் சில சத்தியங்களும் கவிதை வடிவில் கையாளப்பட்டுள்ளன. வெற்றி வாழ்க்கைக்கான வழி தெரியாத பலருக்கு வேதத்தை வாசித்து விளங்கிக்கொள்ள முடியாத பல சத்தியங்கள் இந்நூலில் வெற்றியின் வழி, உற்பத்திக் கும்மி, என்ன கைம்மாறு செய்வோம், தேவனவர் மெய்யாம், மீட்கும் மனிதன், தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம், உன் நிலையை நீயும் உணராயோ?, பரிந்து பேச ஒருவர், குடும்பம், மலைப் பிரசங்கம், வேதாகமப் பதிகம், நல்ல சமாரியன், அந்திக் கிறிஸ்து-1, அந்திக் கிறிஸ்து-2, சோமசுந்தர தேசிகர், ஞானகுரு பதிகம், செபமாலை ஆகிய தலைப்புகளில் அமைக்கப்பெற்ற இலகுவான கவிதை களாகப் புனையப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14768).

ஏனைய பதிவுகள்