தம்பிப்பிள்ளை காசிநாதன். யாழ்ப்பாணம்: தம்பிப்பிள்ளை காசிநாதன், ஓய்வுபெற்ற பிரதிப் பதிவாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1998. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், கந்தர்மடம்).
(14), xiv, 77 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
கடவுளும் பக்தியும், சக்தி வழிபாடு, அம்பிகையின் திருவுருவங்கள், சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோவில், சைவ விரதங்கள் (ஒவ்வொரு மாதமும் அனுட்டிக்கப்படும் விரதங்கள் தனித்தனியாக மாத ஒழுங்கில் விளக்கப்பட்டுள்ளன), வழிபாட்டு முறைகள், திருக்கோயிலில் செய்யக்கூடாதவை, எனது அப்புவைப் பற்றிய நீங்காத நினைவலைகள், பாயிரம்-மானியம்பதி ஸ்ரீ தா.சுவாமிநாதன், திருவூஞ்சல்- மானியம்பதி வித்துவான் மகாஸ்ரீ அ.சுவாமிநாத முதலியார் ஆகிய 10 தலைப்புகளில் இந்நூலில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33188).