சோ.குஹானந்த சர்மா. கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(4), 73 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0881-23-9.
இந்து வித்தியாநிதி, சிவாகம பண்டிதர் பிரம்மஸ்ரீ சோ.குஹானந்த சர்மா அவர்கள் இலங்கை, கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஓய்வுநிலை பாடநூல் உற்பத்தி அதிகாரியாவார். புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் தேவஸ் தானம், கொழும்பு சிவகாமி அம்பிகா சமேத பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம், திருக்கோணமலை பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் ஆகியவற்றின் குருவாக விளங்கும் இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆன்மீக நூல் களை எழுதியுள்ளார். திறந்த பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டம் பெற்றவர். இந்நூலில் ஆனந்தத் தாண்டவம் அமைந்த தைத்திங்கள், சிவசிந்தனையைத் தரும் மாசி, நல்வழி காட்டும் பங்குனி, புதுப் பொலிவைத் தரும் சித்திரை, அன்பும் அருளும் நிறைந்த வைகாசி, ஆனித் திருமஞ்சனம், குதூகலம் கொண்ட ஆடி, மங்கல வாழ்வு நல்கும் ஆவணி, அம்பாள் வழிபாடு கொண்ட புரட்டாதி, தத்துவங்களை விளக்கும் ஐப்பசி, சிவதரிசனத்தைக் காட்டும் கார்த்திகை, நற்பெரு வாழ்வை நல்கும் மார்கழி, விசேட விரதகாலத் திருமுறைகள், நல்வாழ்வுக்கான திருமுறைகள் ஆகிய தலைப்புகளில் அமைந்த 14 கட்டுரைகள் வாயிலாக இந்துசமய விரதங்கள், விழாக்கள் என்பவற்றை இந்நூலில் விளக்கி யிருக்கின்றார்.