வனஜா தவயோகராஜா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 3: கொழும்பு மகளிர் இந்துமன்றம், 15, பகதல வீதி, 2வது தமிழ்ப் பதிப்பு, 2005, 1வது ஆங்கிலப் பதிப்பு, 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
xix, 324 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1000., அளவு: 22×14 சமீ.
இந்நூல் 2004இல் ஆங்கில மொழியில் Hindu Traditions என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பாக வெளிவரும் தமிழ்ப் பதிப்பில் இந்து சமயத்தில் பின்பற்றப்படும் எண்ணற்ற சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கான தெளிவான விளக்கத்தை மூன்று இயல்களில் இந்நூல் வழங்குகின்றது. 1ஆவது இயலில் ஆலய வழிபாடு, கோபுர தரிசனம், கொடிமரம், ஆலய வழிபாடும் கோவிலும் விளக்கங்களும், இலங்கையில் புகழ்பெற்ற சைவத்திருத்தலங்கள், கும்பாபிஷேக முறைகளும் விளக்கங்களும், உற்சவங்கள், ஆடிவேல், இறைவனின் திருவுருவங்கள், விரதங்கள், திருவிளக்குப் பூசை, இராகுகாலப் பூசை, ஸ்ரீ சந்தோஷி மாதா பூஜை, விரதங்களும் விழாக்களும் ஆகிய விடயங்களும், 2ஆவது இயலில் குழந்தைப் பருவம், கிரியையுறுப்பியல், சைவ அநுட்டானம், சந்தியா வந்தனம், தீட்சை, பூப்புனித நீராட்டுவிழா, திருமணச் சடங்கு, புதுமனை புகுதல், சஷ்டியப்த பூர்த்தி, சைவ அபரக்கிரியை, ஆசௌச விளக்கம், இறப்பின் பின்வரும் பாவபுண்ணியங்கள், சிரார்த்த திதி ஆகிய விடயங்களும், 3ஆவது இயலில் ஓம், மந்திரங்கள், பஞ்சபுராணம், திருமுறைகள், சிவசின்னங்கள், தத்துவங்களும் இந்துப் பாரம்பரியம் பற்றிய கேள்வி-பதில்களும் விளக்கப்பட்டுள்ளன. இறுதியாக நான்காவது இயலில் தமது மன்றம் தொடர்பான செய்திகளும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37252).