12049 – இந்துப் பண்பாட்டு மரபுகள்.

ப.கோபாலகிருஷ்ண ஐயர். யாழ்ப்பாணம்: வித்தியா வெளியீடு, புதிய இல. 6, ஓடை ஒழுங்கை, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, மே 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லட்சுமி அச்சகம், 37, கண்டி வீதி, சுண்டிக்குளி).

viii, 145 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 19.5×14 சமீ.

இந்துப் பண்பாட்டு மரபுகளை வேத மரபு, ஆகம மரபு, புராண மரபு, கலை மரபு, ஆத்மீக மரபு ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தி, அவற்றோடு தொடர்புடைய சில முக்கியமான சிந்தனைகள் இந்நூலில் இடம்பெறும் 11 13 கட்டுரைகளில் விளக்கம் பெறுகின்றன. வேத மரபு என்ற பிரிவின்கீழ் வேதங்கள் வழிவந்த இந்துப் பண்பாட்டு மரபுகள் என்ற கட்டுரை இடம்பெறுகின்றது. ஆகம மரபு என்ற பிரிவின்கீழ் சிவாகமங்கள், சிவாகம நெறியில் கும்பாபிஷேகக் கிரியை, காலந்தோறும் விநாயகர் வழிபாடு ஆகிய மூன்று கட்டுரைகளும், புராண மரபு என்ற பிரிவின் கீழ் இந்துப் பண்பாட்டின் கருவூலமான பதினெண் புராணங்கள், திருக்கோயில் வழிபாட்டில் மூர்த்தி தல தீர்த்த மரபு ஆகிய இரு கட்டுரைகளும், கலை மரபு என்ற பிரிவின் கீழ் விக்கிரகக் கலை மரபில் சிவலிங்கம், சிற்பக்கலை மரபு பேணும் சிற்பக் கலைஞன் ஆகிய இரு கட்டுரைகளும், ஆத்மீக மரபு என்ற பிரிவில் குருபாரம்பரியம், இந்து சமயம் காட்டும் ஆன்மீக வாழ்வு, இறப்பிற்கு முன்னும் பின்னும் ஆகிய மூன்று கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13718).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்