உடப்பூர் வீரசொக்கன். உடப்பு: இளம் தாரகை வட்டம், 1வது பதிப்பு, ஜுலை 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xiii, 59 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 215., அளவு: 21×14.5 சமீ.
சக்தி வழிபாடுகள் இலங்கையில் முனைப்புப்பெற்றுவரும் இக்காலத்தில் உடப்பு, முந்தல், பாண்டிருப்பு போன்ற இடங்களில் திரௌபதி அம்மன் வழிபாட்டு முறையானது பாரம்பரியத்துடனும் மரபுகளைத் தழுவியும் நிகழ்த்தப்படுகின்றது. இத்தகைய பின்புலத்தில் திரௌபதையம்மன் ஆலயங்களின் தொன்மைகள், சிறப்புகள், வழிபாட்டு முறைமைகள், அதையொட்டிய உற்சவ நடைமுறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் என்பவற்றை உள்ளீடாகக் கொண்டு இச்சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு, சக்தி வழிபாடு அதன் தொன்மை, திரௌபதை வழிபாட்டின் தோற்றம், இலங்கையில் தொன்மையும் சிறப்பும் கொண்டது திரௌபதையம்மன் வழிபாடு (மீள்பிரசுரம்: தினகரன், 09.01.2014), திரௌபதை அம்மன் ஆலய வழிபாடுகள், பாண்டிருப்பு திரௌபதை அம்மனின் தீப்பள்ளம் உற்சவம், உடப்பு திரௌபதி அம்மன் ஆலயமும் வழிபாட்டு முறைகளும், முந்தலில் தமிழ் பண்பாட்டை எடுத்தியம்பும் திரௌபதி உற்சவம் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.