வேலுப்பிள்ளை அம்பிகைபாகன். யாழ்ப்பாணம்: காங்கேயன் கலைக்கோட்டம், கலாபவனம், இல.6, தேவாலய வீதி, உடுப்பிட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செற், நாவலர் வீதி).
xii, 80, (20) பக்கம், 20 தகடுகள், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ.
சக்தி வழிபாட்டிற்கான தலங்களை சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகளிலும், தாயத்துகளிலும் இருந்து கண்டுகொள்ள முடியும் எனக்கூறும் ஆசிரியர், சக்தியின் மூன்று வெளிப்பாட்டு அம்சங்களாக துர்க்கை இலக்குமி சரஸ்வதி ஆகியோரை விரிவாக விளக்குகின்றார். சக்தியின் திருநாமங்கள் என்ற இயலில் மும்மூர்த்திகளை இயக்கும் ஆதிசக்தியாக விளங்கும் பராசக்தி பற்றிக் குறிப்பிடுகையில், ஒரு நாமம் ஒரு உருவம் ஒன்றுமில்லாத பரம்பொருளாகிய சக்தி உலக நன்மையின் பொருட்டு வௌ;வேறு வடிவங்களையும் நாமங்களையும் தாங்கி அருள்புரிந்து வருவதை இலக்கியங்களின் எடுகோளுடன் விளக்குகின்றார். சக்தியின் திருவிளையாடல்களாக மகிடாசுர சங்காரம், பண்டாசுரன் மீதான படையெடுப்பு, தக்கன் யாகம் ஆகியவற்றை விபரிக்கின்றார். நூலின் இறுதியில் 20 வகையான சக்தியின் வடிவங்களை வண்ணப்படங்களாக இணைத்துள்ளார். இந்நூல் சக்தி வடிவம்-தோற்றப் பின்னணி, சக்தியின் தோற்றம், சக்தியின் திரு நாமங்கள், சிற்ப நூல்களில் சக்தி வடிவங்கள், சக்தியின் சைவச் சார்பு வடிவங்கள், சக்தியின் வைணவ சார்பு வடிவங்கள், சக்தியின் திருவிளையாடல், சக்திபீடங்கள் ஆகிய எட்டு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக சக்தியின் ஆயிரம் திருநாமங்கள், துர்க்காசூக்தம், வடிவங்களின் விபரப்பட்டியல், படங்கள் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33261).