பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா பஜனை நிலையம். பருத்தித்துறை: பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா பஜனை நிலையம், வியாபாரிமூலை, 1வது பதிப்பு, 1993. (பருத்தித்துறை: விநாயகர் தரும நிதிய அச்சகம், புலோலி மேற்கு).
(8), 42 பக்கம், விலை: ரூபா 35., அளவு: 21×15 சமீ.
பகவான் ஸ்ரீ சத்யசாயி நிறுவனங்களில் வௌ;வேறு தொண்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பலதரப்பட்ட தீவிர பணியாளர்களுக்கு இந்நூல் ஒரு கைந் நூலாகும். பகவான் பாபாவின் ஒன்பது ஒழுக்கக் கோவையும் இங்கு விபரமாக விளக்கப்பட்டுள்ளன. பத்து அன்புக் கட்டளைகள், பஜனை ஒழுங்குமுறை, பஜனை நடைமுறைகள், ஆத்மீக சாதனைகள், ஸ்ரீ ஸத்யஸாயி ஸுப்ரபாதம், அஷ்டோத்திர சத நாமாவளி, ஆகார நிவேதன மந்திரம், ஸாயிராம மங்களம் ஆகிய ஒன்பது அத்தியாயங்களின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37662).