12060 – வழிபாடு.

ப.கணபதிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: அமரர் பண்டிதர் ப.கணபதிப்பிள்ளை நினைவுமலர்க் குழு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2003. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் ஓப்செட் பிரின்டிங், நல்லூர்).

vi, 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

தாம் காலம் முழுவதும் பெற்ற சைவசமயம் சார்ந்த நிலையான உண்மைகளதும் அனுபவங்களதும் களஞ்சியமாக இந்நூலை எழுதியுள்ளார். சைவசமய சாதகர்கள் அறிந்து கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து விடயங்களும் இச்சிறிய நூலிலே அடங்கியுள்ளன. இந்நூலை எழுதி முடித்த சில காலங்களில் 22.02.2002 அன்று நூலாசிரியர் இறைபதமெய்திவிட்டார். அன்னாரின் மறைவின் முதலாம் ஆண்டு நிறைவின் போது 12.2.2003 அன்று இந்நூல் கலாநிதி க.சொக்கலிங்கம் அவர்களின் அணிந்துரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31839).

ஏனைய பதிவுகள்

17107 அமைதி.

சுவாமி ஜோதிமயானந்தர். கதிர்காமம்: யோகாச்சிரம வெளியீடு, 1வது பதிப்பு, 1968. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. ‘ஸ்ரீ சுவாமி ஜோதிமயானந்தர் மிக அடக்கமான சாதகர். அவர்