பொன் தெய்வேந்திரன். இணுவில்: இணுவை சிவகாமி அருள்நெறி மன்றம், சிவகாமிபுரம், இணுவை கிழக்கு, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அருண் அச்சகம்).
(4), 54 பக்கம், விலை: ரூபா 45.00, அளவு: 21.5×15 சமீ.
மாத ஒழுங்கில் சைவர்கள் அனுஷ்டிக்கும் பின்வரும் விரதங்கள் பற்றியும் அவற்றின் பலன்கள் பற்றியும் இந்நூல் பிரதானமாகக் கூறுகின்றது. தைப்பொங்கல், தைப்பூசம், மகா சிவராத்திரி, மாசி மகம், மாமாங்கம்-மகாமங்கம், பங்குனித் திங்கள், பங்குனி உத்திரம், புதுவருடப் பிறப்பு, சித்திரா பூரணை, சித்திரை அட்டமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடிப்பிறப்பு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடிச் செவ்வாய், வைரவ விரதம், விநாயக சதுர்த்தி, ஆவணி ஞாயிறு, புரட்டாதிச் சனி, நவராத்திரி மாளயம், கேதார கௌரி விரதம், தீபாவளி, கந்தசஷ்டி, ஐப்பசி வெள்ளி, ஏகாதசி விளக்கீடு, கார்த்திகை சோமவாரம், விநாயகர் சஷ்டி விரதம், திருவெம்பாவை, பிரதோஷம், அபிராமிப்பட்டர் விழா, திருவிளக்குப் பூசை, நவக்கிரக வணக்கம்/விரதம் ஆகியவற்றை அனுஷ்டிக்கும் முறைகளையும், அவற்றால் விளையும் பலன்களையும் விளக்குகின்றது. மேலும் ஆலய வழிபாடு, மகோற்சவம், கதிர்காம உற்சவம், ஆடிவேல் உற்சவம் ஆகியவற்றின் நியதிகளையும், இறுதியில் விரத காலத்தில் செய்யக்கூடாத/செய்யக்கூடிய காரியங்களையும், கிழமைக்குரிய பூக்கள், பச்சிலைகள் போன்ற தகவல்களையும் இந்நூல் தருகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14197).