12062 – வினை தீர்க்கும் விநாயகர்.

கந்தவனம் தங்கவேலாயுதன். மட்டக்களப்பு: க. தங்கவேலாயுதன், உருத்திரபதி, குருக்கள்மடம், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிறைவ்).

xvi, 144 பக்கம், விலை: ரூபா 101., அளவு: 18×12 சமீ.

கடவுள் நம்பிக்கை, இந்து சமயத்தின் சிறப்பியல்புகள், விக்கிரக வழிபாட்டில் விநாயகர், ஆலய தரிசனமும் அமைப்பும், விநாயகர், விநாயகர் தோற்றம், விநாயகர் திருவுருவ விளக்கம், விநாயகரை எளிய முறையில் வழிபடல், விநாயக வழிபாட்டின் தொன்மை, விநாயக நாமங்களும் விளக்கங்களும், முதல்வன் விநாயகன், வெளிநாடுகளில் விநாயக வணக்கம், ஞானக் கொழுந்து, மகா கணபதியின் 32 திவ்விய தரிசனங்கள், விநாயகர் விரும்பும் நிவேதனப் பொருட்கள் ஆகிய தலைப்புகளில் விநாயகர் வழிபாடு பற்றிய பல்வேறு தகவல்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14809). மேலும் பார்க்க: 13A10, 12525, 12832, 12883, 12962, 12993

ஏனைய பதிவுகள்

15383 இளையராஜாவும் இசைக் கருவிகளும் (கட்டுரைகள்).

இ.சு.முரளிதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 48 பக்கம், விலை: