12065 சைவ சமயம்: க.பொ.த.(சாதாரணம்) புதிய பாடத்திட்டத் தொகுதி 1974-75.

விவேகானந்த சபை. கொழும்பு: விவேகானந்த சபை வெளியீடு, 1வது பதிப்பு, ஆவணி 1973. (கொழும்பு 11: அவ்ரா பிரின்டிங் வேர்க்ஸ், 19, செட்டியார் தெரு).

118+102+xxvii+23 பக்கம், விலை: ரூபா 4.00, அளவு: 20.5ஒ14 சமீ.

கொழும்பு விவேகானந்த சபையினரின் சார்பில் ச.சுப்பிரமணியம், இ.செல்லத்துரை, க.கந்தசாமி ஆகியோர் எழுதித் தொகுத்து வழங்கியுள்ள இந்நூல், சைவ சமய வரலாறு, பன்னிரு திருமுறைகள், சைவ சித்தாந்த சாத்திரங்கள், ஈழத்திற் சைவம், சைவாதீனங்களின் தோற்றம்-வளர்ச்சி-சேவை, ஆகிய பாடங்களை முதலாம் பகுதியிலும், சைவசித்தாந்த தத்துவங்களான பதி, பசு, பாசம் (ஆணவம்-கர்மம்- மாயை) ஆகியவற்றை இரண்டாம் பகுதியிலும், சைவ சாதனைகள் விரதங்கள் ஆகியவற்றை மூன்றாம் பகுதியிலும், சைவக்கிரியைகளான திருமணக் கிரியைகள், அபிஷேகம், அபரக் கிரியைகள், சிரார்த்தம் ஆகியவற்றை நான்காம் பகுதியிலும், திருவருட்பாக்களான தேவாரம், திருவருட்பயன், சமயாசாரியார் சந்தனாசாரியார் வரலாறு என்பவற்றை ஐந்தாம் பகுதியிலும் விளக்குகின்றது. சுருக்க விடைப் பயிற்சி வினாக்கள், விரிவான விடைப்பயிற்சி வினாக்கள் ஆகியன இறுதிப் பகுதியில் காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25488).

ஏனைய பதிவுகள்