12066 – சைவ நெறி: ஒன்பதாம் வகுப்பு.

பதிப்புக்குழு. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 7வது பதிப்பு, 1988, 1வது பதிப்பு, 1980, 2வது பதிப்பு, 1982, 3வது பதிப்பு, 1983, 4வது திருத்திய பதிப்பு, 1985, 5வது பதிப்பு, 1986, 6வது பதிப்பு, 1987. (கொழும்பு: திசர அச்சகம், தெகிவளை).

xii, 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

இந்நூலில் சைவத்தின் தொன்மை (சிந்துவெளி நாகரிகம், வேதங்கள், உபநிடதங்கள், சங்க நூல்கள்), நால்வர் (சம்பந்தர் வரலாறு, நாவுக்கரசர் வரலாறு, சுந்தரர் வரலாறு, மாணிக்கவாசகர் வரலாறு), தோத்திரப் பாடல்கள் (திருமுறைகள், பிற்காலத் தோத்திரப் பாடல்கள்), வாழ்க்கையிற் சைவநெறி (ஆகமம் காட்டும் நெறி, சமய தீட்சை, குரு இலிங்க சங்கம வழிபாடு, திருக்கோவிலும் திருவிழாவும், விரதங்கள், பண்டிகைகள்) ஆகிய நான்கு பிரிவுகளில் ஒன்பதாம் வகுப்புக்குரிய சைவநெறிப் பாடத்திட்டத்துக்கு அமைவாக பாடங்கள் வகுத்து விளக்கப்பட்டுள்ளன. 1985ஆம் ஆண்டுத் திருத்திய பதிப்புக்கான ஆலோசனைக் குழுவில் பேராசிரியர் ஆ.சதாசிவம், கலாநிதி அ.கந்தையா ஆகியோருடன் செ.வேலாயுதபிள்ளை, பெ.கணநாதபிள்ளை, வே.வல்லிபுரம், திருமதிகள் ச.இலிங்கம், ப.சோமகாந்தன், சொர்ணவதி மாசிலாமணி ஆகியோர் இயங்கியிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34568).

ஏனைய பதிவுகள்