12068 – சைவ போதினி-இரண்டாம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 12: ஓட்டோ அச்சகம், 122, சென்ட்ரல் ரோட்).

64 பக்கம், சித்திரங்கள், விலை: 60 சதம், அளவு: 18×12.5 சமீ.

விவேகானந்த சபையினர் தாங்கள் அகில இலங்கை அடிப்படையில் ஆண்டுதோறும் நடத்திவரும் சைவ சமய பாடப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பயனுற வேண்டியும், இலங்கை அரசாங்க கல்வித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் இந்நூல் எழுதப்பட்டது. இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குரிய இந்நூலில் சிவபெருமான் பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தமை, உமாதேவியார் குழந்தைக்குப் பால் கொடுத்தமை, தேவாரம், கடலில் மிதந்த அப்பர், தேவாரம், நல்லூர்க் கந்தசுவாமி கோவில், கொன்றை வேந்தன், தேவாரம், பிட்டுவாணிச்சி அம்மையார், திருவாசகம், கோயிலுக்குச் செல்லுதல், கந்தசுவாமியாரும் ஒளவையாரும், சிவபெருமான் குண்டோதரனுக்கு அன்னம் இட்டமை, வௌ;வேறு முறையான வழிபாடு, புராணம், பிள்ளையாரும் அகத்திய முனிவரும், கொன்றை வேந்தன் ஆகிய 17 பாடங்களை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24720).

ஏனைய பதிவுகள்