12072 – சைவ போதினி கீழ்ப்பிரிவு 1 (ஆறாம் வகுப்புக்குரியது).

நூலாக்கக்குழு. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, 1966. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்).

(4), 180 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 1.55, அளவு: 18×12.5 சமீ.

கொழும்பு விவேகானந்த சபை நடத்தும் அகில இலங்கைச் சைவசமய பாடப் பரீட்சைக்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட நூல். பொது அறிவு, நன்னெறி, திருக்குறள், இளையான்குடி மாறநாயனார், மார்க்கண்டேயர், சிவபெருமான் சோதிப்பிழம்பாய்த் தோன்றியது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சர்ப்பம் தீண்டி இறந்தவனை எழுப்பியருளியது, பூசலார் நாயனார், கண்ணப்ப நாயனார், திலகவதியார், சுந்தரமூர்த்தி நாயனார் முதலை உண்ட பாலகனை மீட்டருளியது ஆகிய 11 உரைநடைக் கட்டுரைகளும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம், திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ், பட்டினத்தார் பாடல் ஆகிய அருட்பாடல்களும் இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9566).

ஏனைய பதிவுகள்