12072 – சைவ போதினி கீழ்ப்பிரிவு 1 (ஆறாம் வகுப்புக்குரியது).

நூலாக்கக்குழு. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, 1966. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்).

(4), 180 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 1.55, அளவு: 18×12.5 சமீ.

கொழும்பு விவேகானந்த சபை நடத்தும் அகில இலங்கைச் சைவசமய பாடப் பரீட்சைக்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட நூல். பொது அறிவு, நன்னெறி, திருக்குறள், இளையான்குடி மாறநாயனார், மார்க்கண்டேயர், சிவபெருமான் சோதிப்பிழம்பாய்த் தோன்றியது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சர்ப்பம் தீண்டி இறந்தவனை எழுப்பியருளியது, பூசலார் நாயனார், கண்ணப்ப நாயனார், திலகவதியார், சுந்தரமூர்த்தி நாயனார் முதலை உண்ட பாலகனை மீட்டருளியது ஆகிய 11 உரைநடைக் கட்டுரைகளும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம், திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ், பட்டினத்தார் பாடல் ஆகிய அருட்பாடல்களும் இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9566).

ஏனைய பதிவுகள்

14843 சிந்தனைத் திடரில் சிதறிய துகள்கள்.

கண்ணன் கண்ணராசன். யாழ்ப்பாணம்: சாரல் வெளியீட்டகம், சித்தங்கேணி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). x, 89 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5

12864 – பொச்சங்கள்.

வ.அ.இராசரெத்தினம். திருக்கோணமலை: கல்வி, பண் பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (திருக்கோணமலை: அச்சகத் திணைக்களம், வடக்குகிழக்கு மாகாண அரசு). (16), 17-175 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14410 பேச்சுச் சிங்களம் (Bahashana Sinhala Mattama 3).

எஸ்.ஜே.யோகராஜா, டயனா குமாரி இத்தமல்கொட. ராஜகிரிய: அரசகரும மொழிகள் திணைக்களம், பாஷா மந்திரய, கோட்டே வீதி, 3ஆவது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 2008, 2வது பதிப்பு, 2012. (கொழும்பு: அரச பதிப்பகத் திணைக்களம்).