தமிழவேள் (இயற்பெயர்: க.இ.கந்தசாமி). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).
60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ.
1978 முதல் பாடசாலைகளில் சைவ சமயத்தை பயிற்றுவிப்பதற்கான பாட நூலாக இது வெளிவந்துள்ளது. எட்டாம் வகுப்பிற்குரிய பாடவிதானத்தை அடிப்படையாகக் கொண்டு, சைவசமய வரலாறு (சைவசமயம் என்பதன் பொருள், சிந்துவெளிக் காலம், வேத காலம், ஆகம காலம், சங்க காலம், பக்திநெறிக் காலம், பிற்காலம்), சைவ சமயத் தமிழ் முதநூல்கள் (திருமுறை கண்ட வரலாறு, திருமுறைகளின் பகுப்பு, திருமுறைப் பெருமை, மெய்கண்ட நூல்களின் சிறப்பு, மெய்கண்ட நூல்களும் ஆசிரியர்களும், மெய்கண்ட நூல்களின் அமைப்பு), சைவக் கொள்கைகள் (முப்பொருள்கள், திருவருளும் வீடுபேறும், சிவமூர்த்தங்கள், சக்தி வழிபாடு, சக்தி விரதங்கள், நாற்பாதங்கள்), சமயப் பெரியார்கள் (மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார், அதிபத்த நாயனார், திருநாளைப்போவார் நாயனார், சுவாமி விவேகானந்தர்), திருமுறைப் பாடல்கள் (திருஞானசம்பந்தர் பாடல்கள், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர், திருவிசைப்பாதிருப்பல்லாண்டு, திருமந்திரம், பெரிய புராணம்), திருக்குறள் பாடல்கள், உபநிடதக் கதைகள் (நசிகேதன் கதை, சுவேதகேது கதை), வினாக்கள் என எட்டுப் பிரிவாகப் பகுத்து விடயங்கள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34589). மேலும் பார்க்க: 13A11, 13A12, 13A13,12510