12078 – சுழிபுரம் பறாளை விநாயகர், மூளாய் விநாயகர், பொன்னாலை விஷ்ணு ஆலய வரலாறுகள்.

குணரத்தினம் செல்லத்துரை. யாழ்ப்பாணம்: கு.செல்லத்துரை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(9), 19 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

சுழிபுரம் பறாளை விநாயகர், மூளாய் விநாயகர், பொன்னாலை விஷ்ணு ஆலயம் ஆகியவற்றின் வரலாறுகளினூடாக, அவற்றை நிறுவியதாகக் கருதப்படும் சித்திராயன் பரம்பரை பற்றி இந்நூலில் ஆசிரியர் ஒரு வரலாற்றுப் பதிவினை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் வடமேற்கே தொல்புரம், சுழிபுரம் (சோழியபுரம்) என்னுமிரு கிராமங்கள் உள்ளன. சுழிபுரம் கிராமத்தின் வயல் சூழ்ந்த மருத நிலப்பகுதியில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக இலங்கையின் புராதன விநாயகர் ஆலயங்களில் ஒன்றான ‘பறாளை விநாயகர் ஆலயம்’ அமைந்துள்ளது. சுளிபுரத்திலிருந்து மூளாய் செல்லும் பிரதான வீதியில் உள்ள வளைவில் அமைந்துள்ளது மூளாய் விநாயகர் கோவில் என வழங்கும் ‘மூளாய் வதிரன்புலோ சித்தி விநாயகர் ஆலயம்’. அழகிய இவ்வாலயத்துடன் தீர்த்தக் கேணியொன்றும் அமைந்துள்ளது. பொன்னாலை, யாழ்ப்பாணக் கடலேரிக் கரையில் காரைநகரை நோக்கியபடி அமைந்துள்ளது. இங்கு குடிகொண்ட விஷ்ணுவின் ஆலயமே ‘பொன்னாலை விஷ்ணு ஆலயம்’. சுழிபுரம், மூளாய், வட்டுக்கோட்டை என்னும் ஊர்கள் பொன்னாலையைச் சுற்றியே அமைந்துள்ளன. பொன்னாலை, யாழ்ப்பாணம் – மானிப்பாய்-காரைநகர் வீதி, யாழ்ப்பாணம்-பொன்னாலைபருத்தித்துறை வீதி, வட்டுக்கோட்டை-மூளாய் வீதி என்பவற்றால் வரையறுக்கப்படும் பகுதிக்குள் ஏறத்தாழ அடங்குகிறது. பொன்னாலை விஷ்ணு ஆலயத்தில் கல்லுருவமாக அமைந்த ஆமையை ஆலயக் கருவறையில் காணலாம். அந்த கூர்மாவதார மூர்த்திக்கே ஆலயத்தின் முதற்பூஜை இன்றும் நடக்கிறது. ஆமை வடிவில் பெருமாள் தோன்றிய சமுத்திரம் திருவடிநிலை என்று இன்றும் போற்றப்படுகிறது. இவ்வாலய தீர்த்த விழா வருடாந்தம் இச்சமுத்திரக் கரையிலேயே நடைபெறுகிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 13509).

ஏனைய பதிவுகள்

12467 – சிவசக்தி 2016: றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் கலைமகள் ; விழா மலர்

என்.கே.அபிஷேக்பரன், எம்.ரூபீக்ஷன், வு.சிந்துஜன் (ஆசிரியர் குழு). கொழும்பு:இந்து மாணவர் மன்றம், றோயல் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016.(கொழும்பு: ஓசை டிஜிட்டல் நிறுவனம்). 256 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

12889 – கோமாதா கருத்துக் களஞ்சியம்.

சு.செல்லத்துரை. இளவாலை: அன்னை சுப்பிரமணியம் பத்தினிப்பிள்ளை நினைவு வெளியீடு, புனித வாசம், பத்தாவத்தை, 2வது பதிப்பு, மார்ச் 2001, 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (சங்கானை: சாய்ராம் புத்தக நிலையம்). 35 பக்கம், தகடுகள்,

12751 – அலையருவி சிறப்பு மலர் 1995.

தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 1995. (வத்தளை: வத்தளை அச்சகம், 17/10, நீர்கொழும்பு வீதி). (82) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12122 – அருணகிரிநாத சுவாமிகளும் கதிர்காமத் திருப்புகழும்.

பண்டித நடராஜபிள்ளை. யாழ்ப்பாணம்: பண்டித நடராஜபிள்ளை, நீர்வேலி, 1வது பதிப்பு, 1959. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு). viii, 84 பக்கம், தகடுகள், விலை: ரூபா 2.00, அளவு: 18×12

14595 கலாபம்(கவிதைத் தொகுப்பு).

ம.கலையரசி. ஹட்டன்: மகேந்திரன் கலையரசி, செனன், 1வது பதிப்பு, 2015. (ஹட்டன்: காயத்திரி அச்சகம்). 112 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ. ஹட்டன்-செனன் தமிழ் மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் வரை