12079 – திருக்கோணமலைப் புராதன திருவுருவங்கள்: மேற்படி தலத் தேவாரப் பதிகத்துடன்.

E.P.இராசையா. யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1951. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).

12 பக்கம், விலை: சதம் 10., அளவு: 17×11.5 சமீ.

இந்நூலில் அம்பிகாதேவியின் ஆலயம், இதன் பூர்வ வரலாறு, கன்னியாய் வெந்நீர் ஊற்றுக்கள், கஜபாகு அரசனுக்கும் இந்த ஆலயத்துக்கும் உள்ள தொடர்பு, தம்பலகாமம் கோணேசுவரர் கோயில், மண்டபம், திருக்கோணாசலத் திருவுருவங்கள், மூர்த்திகளின் விபரம் ஆகியவற்றை விபரிக்கும் கட்டுரை முதலாவதாகவும், கோணேசர் மீது திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அவர்களால் பாடப்பெற்ற தேவாரப்பதிகங்கள் அதனைத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3077).

ஏனைய பதிவுகள்

13329 காஷ்மீர்: முடிவற்ற முரண்பாடு.

எஸ்.எம்.ஆலிப். ஒலுவில்: அரசியல் விஞ்ஞானச் சங்கம், கலை கலாசார பீடம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). (12), 230 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 22×14.5 சமீ.,