12081 – நாகதம்பிரான் மான்மியம்.

த.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: த.சுப்பிரமணியம், பாக்கியவாசம், சித்தன்கேணி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1963. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).

47 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ.

நாகர்களின் வரலாறு, நாக வழிபாட்டின் மகிமை, பல்வேறு நாகதம்பிரான் ஆலயங்களின் வரலாற்றுப் பெருமைகள் என்பன பற்றியும் இந்நூலில் ஆசிரியர் எடுத்துக்கூறியுள்ளார். பூர்வீக இலங்கை, நாகர் யார்?, நாக வழிபாடு, சூரிய வழிபாடு, நாகத்தை வணங்கக் காரணம், நாகர், நாகதம்பிரான் ஆலயங்கள், நாகர்கோயில் நாகதம்பிரான், நாகதம்பிரான், கப்பற் திருவிழா, புளியம்பொக்கணை நாகதம்பிரான், புதூர் நாகதம்பிரான்,சேனையூர் நாகதம்பிரான், நவாலியூர் நாகதம்பிரான், வடலியடைப்பு ஸ்ரீ புற்றடிச் சங்கரன் கோயில், பாம்பின் சிறப்பு, ஆதிசேடன், மண்டலத்தைத் தாங்குதல், பாம்பின் விடம், சத்துருக்கள், குண்டலி சத்தி, முடிபு ஆகிய 22 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் பண்டிதர் த.சுப்பிரமணியம், யாழ்ப்பாணம் சித்தன்கேணியைச் சேர்ந்தவர். சொல்வன்மை, எழுத்தாற்றல், கவித்துவம் மிக்கவர். திருநெல்வேலி சைவாசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்றதுடன் பண்டிதர் பரீட்சையிலும் சித்தியெய்திய இவர் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 18433).

ஏனைய பதிவுகள்

lizenzierte and seriöse Versorger im Probe

Content El torero $ 1 Kaution – Diese Vorteile des Angeschlossen Poker Echtgeldspiels beste geldverdienende Apps, diese gegenseitig 2024 auszahlen Entsprechend verkaufst Respons dieser tage

16387 கதை நேரம் கதைகள் : திரைக் கதைகள் (பாகம் 2).

பாலு மகேந்திரா. தமிழ்நாடு: வம்சி புக்ஸ், 19, னு.ஆ.சாரோன், திருவண்ணாமலை-1, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: மணி ஆப்செட்). 232 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: