12084 – மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம்: வெள்ளிவிழா மலர் 1968-1993.

த.செல்வநாயகம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: இந்து இளைஞர் மன்றம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்).

xxxx, (2), 65 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ. 30.4.1994

அன்று நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்வின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். இதில் ஆசியுரைகள், வாழ்த்துரைகள், அறிக்கைகளுடன் தியானம் (சுவாமி அஜராத்மானந்த), சேவைகளின் சிகரம் (திமிலைத் துமிலன்), திருவெம்பாவை-பாடல்களின் பொருள் தேடும் முயற்சி (ப.வே.இராமகிருஷ்ணன்), வாழ்க்கையில் சைவம் (கு.சோமசுந்தரம்), சைவசித்தாந்தம் கூறும் கன்மக் கோட்பாடு (சாந்தி நாவுக்கரசன்), எல்லாம் இறைவன் அருளே (செ.குணரத்தினம்), சமயத்தின் அடிப்படைத் தத்துவமும் விளக்கமும் (அன்புமணி), மட்டக்களப்பு மாநில வரலாற்றுச் சிறப்புமிக்க சைவத் திருக்கோயில்கள் (எஸ்.எதிர்மன்னசிங்கம்), புராதன ஈழத்தில் இந்து மதம் (க.தங்கேஸ்வரி), தோன்றாத் துணை (ஆர்.வடிவேல்), திருமூலர் காட்டிய திருநெறி (வி.ரி.செல்வத்துரை), அகிலம் புகழும் அருள்மொழி அரசு ஞானவள்ளல் (சு.இராசையா), அடியார்கள் கண்ட அன்புநெறி (எஸ். தெய்வநாயகம்), நம்மாழ்வார் புகழ் பாடும் மதுரகவியாழ்வார் (த.யுவராஜன்), சமயவாழ்வு (த.செல்வநாயகம்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. மலரின் இறுதிப் பகுதியில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம், மன்றத்தால் மகிமைப் பட்டம் பெற்ற மகிமையாளர் மூவர், மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்துக்கு வருகைதந்த பிரமுகர்கள், மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற வெளியீடுகள், வெள்ளிவிழா தொடர்பாக மன்றம் நடத்திய போட்டி முடிவுகள் என்பன இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14091).

ஏனைய பதிவுகள்

12364 – இளங்கதிர்: 35ஆவது ஆண்டு பவளவிழா மலர் 2002/2003.

வி.கோகுலசிங்கம், ந.புஷ்பராசா (இதழாசிரியர்கள்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). (16), 186 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ. 75 வருடகால வரலாற்றைக் கொண்ட

14149 நல்லைக்குமரன் மலர் 2006.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). x, 136 + (48) பக்கம், புகைப்படங்கள்,

14238 விநாயகசட்டிப் புராணம்.

நா.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் (மூலம்), ச.பத்மநாபன் (பதிப்பாசிரியர்). சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், முன்னேஸ்வரம், 1வது பதிப்பு, நவம்பர் 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2டீ, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). viii, 40 பக்கம், புகைப்பட