நூல்வெளியீட்டுக் குழு. மட்டக்களப்பு: ஆலய நிர்வாகம், செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம், 1வது பதிப்பு, மே 1994. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்).
xxxxii, 226 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வரலாறு தொடர்பான பல்வேறு ஆக்கங்களின் தொகுப்பு இது. செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயமும் கிரான்குளமும் (பொ.சிவசுந்தரம்), செட்டிபாளையம் அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயமும் குருக்கள்மடமும் (சா.ஆறுமுகம்), செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் பாரம்பரிய நெறிமுறைகளும் சக்திமிக்க கும்பச் சடங்கின் மகிமையும் (ஆ.முத்துலிங்கம்), செட்டியூர் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் சடங்கும் கலாசார விழுமியங்களும் (வ.ஜீவநாதன்), செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயமும் மாங்காட்டுக் கிராமமும் (க.குணசேகரன்), செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் தேத்தாதீவு மக்களுடைய சடங்கு முறைகளும் அவை மரபுரீதியாகப் பின்பற்றப்பட்டுவந்த வரலாறும் (இ.திருநேசராசா), களுதாவளையும் கண்ணகை அம்மன் குளிர்த்தியும் (ஆ. அரசரெத்தினம்), கொம்புமுறி விளையாட்டும் களுதாவளைக் கிராமமும் (கா. தட்சணாமூர்த்தி), குடியிருப்புக் கிராமமும் கும்பத்து நெல்லும் (செ.மண்முனைப் போடி), எட்டாம்நாட் சடங்கு (வெ.சுந்தரமூர்த்தி), சித்திரைச் சடங்கு வரலாறு (சி.மனோகரன்), கார்த்திகை விளக்கீட்டுச் சடங்குப் பூசை (பெ.ஆறுமுகம்), செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய தைக் குளிர்த்தி வரலாறு (பூ.இராமநாதன்), செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மனும் கட்டாடியார் பரம்பரையும் (ஆ.அரசரத்தினம்), ஆய்வாளருக்குதவும் ஆதாரபூர்வமான தகவல்கள் (நிர்வாகம்), குளிர்த்திப் பாடல் (ஆ.அரசரெத்தினம்), செட்டிபாளையம் கண்ணகை அம்மன்காவியம் (இ.பூ.ஆறுமுகம், சி.பூ.இளையதம்பி), செட்டிபாளையம் கண்ணகை அம்மன் அகவல் (இ.பூ.ஆறுமுகம், சி.பூ.இளையதம்பி), செட்டிபாளையம் கண்ணகை அம்மன் காவியம் (ஆ.அரசரெத்தினம்), செட்டிபாளையம் கண்ணகை அம்மன் மழைக் காவியம் (கட்டாடியார் பரம்பரை), வைரவர் காவியம், வைரவர் அகவல், நாகதம்பிரான் காவியம், நாகதம்பிரான் பிரார்த்தனை, வசந்தன் கவிகள் ஆகிய ஆக்கங்கள் இம்மலருக்கு அணிசேர்த்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14151).