12087 – வேதாரணிய புராணம்.

அகோரதேவர் (மூலம்), க.வேற்பிள்ளை (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: அ.அப்பாக்குட்டியாபிள்ளை, தேவஸ்தான பிரதம இலிகிதர் (தேவஸ்தானம் ஹெட் கிளார்க்கு), வேதாரணிய தேவஸ்தானம், வரணி, 1வது பதிப்பு, 1898. (சென்னபட்டணம்: ஸ்ரீ லலிதா அச்சியந்திரசாலை).

467+20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ.

வேதாரணிய புராணம் யாழ்ப்பாணத்து வரணியாதீன வேதாரணிய தேவஸ்தான தருமகர்த்தாவாகிய ஸ்ரீலஸ்ரீ ஜ.சுவாமிநாத தேசிகரவர்களின் கட்டளையின்படி க.வேற்பிள்ளை அவர்களால் பல பிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதிக்கப்பெற்றது. க.வேற்பிள்ளை யாழ்ப்பாணம், மட்டுவில் என்ற ஊரில் கணபதிப்பிள்ளை உடையார், புலோலியைச் சேர்ந்த உமாமகேசுவரி ஆகியோருக்கு மகவாகப் பிறந்தவர். மட்டுவில் சண்முகம்பிள்ளை, நல்லூர் கார்த்திகேயப் புலவர், ஆறுமுக நாவலர் ஆகியோரிடம் கல்வி கற்றவர். சிதம்பரம் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்றார். செய்யுள் இயற்றுவதில் வல்லவராக இருந்ததால் சிதம்பரம் முத்தையா பட்டர் இவருக்கு ‘பிள்ளைக்கவி’ என்ற பட்டத்தை அளித்தார். இவரது உரையெழுதும் திறமையை வியந்த வித்துவ சிரோமணி பொன்னம்பலப் பிள்ளை இவருக்கு ‘உரையாசிரியர்’ என்னும் பட்டத்தை அளித்தார். ம. வே. திருஞானசம்பந்தம், சட்ட அறிஞர் வே. மாணிக்கவாசகர், குருமணி ம. வே. மகாலிங்கசிவம், நடராசா, கந்தசாமி ஆகியோர் ம. க. வேற்பிள்ளையின் பிள்ளைகளாவர். புலவர் ம.பார்வதிநாதசிவம் இவரின் பேரனாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24065).

ஏனைய பதிவுகள்