12089 – ஸ்ரீ முன்னேஸ்வரம் திருக்கோயில் பண்பாட்டுக் கோலங்கள்.

பா.சிவராமகிருஷ்ண சர்மா. சிலாபம்: ஸ்ரீ சங்கர் வெளியீட்டகம், 144, முன்னேஸ்வரம், 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xviii, 204 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ.

ஸ்ரீ முன்னேஸ்வரம் திருக்கோவிலின் பண்பாட்டு மரபுகளையும் வழிபாட்டுச் சிறப்புகளையும் எடுத்துக்கூறும் வகையில் இந்நூல் வெளிவந்துள்ளது. மகோன்னதமான வழிபாட்டுப் பண்பாட்டு முறை, காலங்கள் தோறும் வளர்ச்சி பெற்ற வழிபாட்டுப் பண்புகள், பலவேலை பழனியப்பனின் அதிகப்பிரசங்கித்தனம், கணக்கப்பிள்ளை பாதுகாத்து வந்த ஆவணங்கள், கல்யாணசுந்தர சாஸ்திரிகளின் ஆராய்வு மனப்பாங்கும் கலந்துரையாடல்களும், கோயிலின் பன்முகத்தன்மையின் மேம்பாடு, இறைபணியில் அர்ப்பணிப்புடன் தொண்டர்கள், ஊர்கூடி தேர் இழுக்கும் மகோற்சவ மாண்பு, கோலாகல வசந்த நவராத்திரியின் வசீகரத்தன்மை, இலட்சார்ச்சனை, கொடியர்ச்சனை மகாயாகம், வசந்த நவராத்திரியும் சண்டி ஹேமமும், மகா கும்பாபிஷேகம், வேதாகம சம்மேளன பிரதிஷ்டாகிரியா விளக்கம், இளைய தலைமுறையில் வழிபாடுகள் ஆகிய 15 தலைப்புகளில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் பிரம்மஸ்ரீ பா.சிவராமகிருஷ்ண சர்மா ஓர் விஞ்ஞானப் பட்டதாரியாக இருப்பதால், இந்து சமயக் கிரியைமுறைகளையும் சம்பிரதாயங்களையும் அறிவியல் பூர்வமாகச் சிந்திக்கும் சிறந்த சிந்தனையாளராகத் தன்னை இந்நூல்வழியாக இனம்காட்டியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

14897 தனி ஈஸ்வரம்: க.வை.தனேஸ்வரன் நினைவு மலர்.

மகவம் கலைவட்டம் (தொகுப்பாசிரியர்கள்). கோண்டாவில்: ஊரெழு, க.வை.தனேஸ்வரன் நினைவுக் குழு, மகவம் கலை வட்டம், 1வது பதிப்பு, ஜனவரி 2005. (கொழும்பு: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ், திலக பிரஸ், 257, டாம் வீதி). viii,

14535 கண்ணன் எங்கள் கண்ணன்: குழந்தை இலக்கியம்.

செ.யோகநாதன். தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம், 44, புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, 2001. (தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம், 44, புகையிரத நிலைய வீதி). 40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80.00, அளவு: 21×14.5 சமீ.,

12143 – தாயுமான சுவாமிகள் அருளிச்செய்த திருப்பாடற்றிரட்டு.

தாயுமானவர் (மூலம்), ஆறுமுக நாவலர் (பரிசோதித்தவர்). சிதம்பரம்: பொன்னுஸ்வாமி, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 10வது பதிப்பு, மன்மத வருடம் அக்டோபர் 1955. (தமிழ்நாடு: வித்தியாநுபாலன யந்திரசாலை, இல.300, தங்கசாலைத் தெரு, சென்னபட்டணம்). (18),