சாமிநாதன் வாகீசன் (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1990. (கண்டி: செனித் அச்சகம், 192 கொட்டுகொடல்ல வீதி).
(54) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
வாழ்த்துரைகள், ஆசியுரைகள் மற்றும் மன்ற அறிக்கைகளையும் சமயம் சார்பான கட்டுரைகளையும் இம்மலர் உள்ளடக்குகின்றது. இவ்விதழில் இளங்கோ காட்டும் வைதீகமதம் (பொ.பூலோகசிங்கம்), முத்தி இன்பம் – தமக்கென வாழா நிலை (சி.தில்லைநாதன்), இந்து மதமும் இரு வகை வழிபாடும் (துரை.மனோகரன்), பக்தி இயக்கமும் அதன் விளைவுகளும் (க.அருணாசலம்), ஈழத்து முருகத் தலங்களும் குறிஞ்சிக் குமரனும் (வ.நந்தகுமார்), குறிஞ்சிக் குமரன் மீது ஒரு பாடல் (ஏ.உதயராணி), மதமும் மனித மனமும் (சி.முரளி), உபநிடதச் சிந்தனைகள் (பா.சி.சர்மா), இன்றைய காலகட்டத்தில் இந்து தர்மத்தின் நிலை (இரா. இரமணிதரன்), நவராத்திரி (ஏ.உதயராணி), ஒரே பார்வையில் இந்து மதமும் உலகின் ஏனைய மதங்களும் (சு.முரளிதரன்), ஞான வரம்பு (மாதினி செல்லத்துரை), அருள்மிகு குறிஞ்சிக் குமரன் மீது ஒரு கீர்த்தனை (சி.சுரேஸ்குமார்), நடைமுறை வாழ்வில் இந்து மதம் (இரத்தினசிங்கம் சத்தியதேவி), இந்து சமயமும் எதிர்கால விஞ்ஞான யுகமும் (க.சத்தியகுமார்), இளைஞர்களே ஒரு நிமிடம் (சி.சண்முக ஆனந்தன்), சிவசூரிய வழிபாடு (ஜுட்.ஆர்.பிள்ளைநாயகம்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13413. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008594).