12095 – இந்து தருமம் 1993-1994.

மரியாம்பிள்ளை ரவிச்சந்திரன் (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1994. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை).

xviiஇ 103 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

வாழ்த்துரைகள், ஆசியுரைகள் மற்றும் மன்ற அறிக்கைகளையும் சமயம் சார்பான கட்டுரைகளையும் இம்மலர் உள்ளடக்குகின்றது. இவ்விதழில் கலியுக வரதனே (திருமகள் குருநாதன்), அமைதிக்கு வேண்டிய ஆன்மீக விளக்கம் (சி.தில்லைநாதன்), கீதை கூறும் ஆன்ம ஈடேற்றம் (அம்பிகை வேல்முருகு), இந்து மதம்: லௌகீகமும் ஆத்மீகமும் (க.அருணாசலம்), சைவ சித்தாந்தம் காட்டும் முத்தி நெறி (மகேஸ்வரி அருள்செல்வம்), இறைவரே ஏகமான குரு: திருமூலரும் குருவும் (சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி), ஆன்மீகத் தேடலில்……(T.V.R.சங்கர்), இந்திய மெய்யியலின் ஆத்மீக மரபு (ம.இராஜரத்தினம்), சமயம் என்பது எதற்காக? (மு.சுந்தரச் செல்வன்), பிறவிப் பெருங்கடல் (தி.ஆனந்தமூர்த்தி), ஆத்ம தரிசனம் (வை.நந்தகுமார்), இந்துமதம் காட்டும் ஆன்மீக வழியில் அன்பு நெறி (முருகேசு ஸ்ரீ வேணுகோபால சர்மா), அருள் புரிவாய் (ஞானாம்பிகை விஸ்வநாதன்), இல்லறத்தில் ஆன்மீகம் (வளர்மதி சுமாதரன்), இந்து சமயம் காட்டும் ஆன்மீக வழி (குமாரசாமி சோமசுந்தரம்), இந்து மதம் காட்டும் ஆன்மீகப் பாதை (சாயிசங்கல்பன்), கீதையின் பார்வையில் ஆன்மீகம் (இரா.இரவிசங்கர்), பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சருடைய ஆத்மீக வாழ்வும் இராமகிருஷ்ண மிஷனின் பணிகளும் (சி.மகேஸ்வரன்), மனித வாழ்க்கையும் இந்து மதமும் (இளையதம்பி சாந்தசொரூபன்), உன்னைப் பிரிகையிலே முருகா….. (மு.தாரகன்) ஆகிய ஆன்மீகக் கட்டுரைகள் முதலாம் பகுதியில் இடம்பெற்றுள்ளன. ‘வரலாறு’ என்ற இரண்டாம் பகுதியில், குறிஞ்சியில் ஒரு அழகன் (க.பாலகிருஷ்ண ஐயர்), தஞ்சைப் பெரிய கோவில் ஓவியங்கள் (ந.வேல்முருகு), பத்தொன்பதாம் நூற் றாண்டில் ஈழத்தில் தோன்றிய சைவ சமய இயக்கங்கள்: 1854 – 1870 (இரா. வை.கனகரத்தினம்), சுவாமி விவேகானந்தரும் பெண்களும் (துரை.மனோகரன்), சைவசமயத்தின் வளர்ச்சியில் சோழப் பெரு மன்னர்கள் (அம்பலவாணர் சிவராஜா), இறைவனின் திருவடிவங்கள் (ஆ.தாரகன்), எங்கே போகிறது இந்து மதம்? (இ.ஸ்ரீதர்), ஆகமங்கள் கூறும் வழிபாடுகள் (வ.சிவலோகதாசன்), இந்து சமயத்துக்குப் புதிய விளக்கம் வேண்டுமா? ஒரு கண்ணோட்டம்… (வே.இராஜ கோபாலசிங்கம்), ஈழத்திருநாட்டின் சமய வளர்ச்சியில் சித்தர்கள் (சாந்தகுமார் சிதம்பரம்), அவதார புருஷர் ஆபத்பாந்தவர் (கேதாரேஸ்வரி பொன்னம்பலம்), 1993/94ம் ஆண்டுக்கான இந்து மாணவர் சங்க 38வது செயற்குழுவின் ஆண்டறிக்கை (தி.கேதீஸ்வரசுதன், செல்வி. ஸ்ரீவதனா) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21427. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008558).

ஏனைய பதிவுகள்

14377 புங்குடுதீவு ஸ்ரீ கணேச வித்தியாசாலை பழைய மாணவர் சங்க வெள்ளி விழா மலர்.

மலர்க் குழு. புங்குடுதீவு: ஸ்ரீ கணேச வித்தியாசாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1951. (யாழ்ப்பாணம்: வே.சுந்தரம்பிள்ளை, விவேகானந்த அச்சகம்). 92 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ. பண்டிதமணி க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார்,

14547 தேர்ந்த சிறுகதைகளும் நாகம்மாள் நாவலும் ஒரு நோக்கு.

தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம், 90/9, புதுச்செட்டித் தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 12: Sharp Graphics Limited, D.G.2, Central Road). vi, 56 பக்கம், விலை: