12098 – இலங்கை இந்து: திருக்கேதிச்சரம் மண்டலாபிஷேக மலர் 1976.

நா.முத்தையா (இதழ் ஆசிரியர்), ஐ.தி.சம்பந்தன் (துணைஆசிரியர்). கொழும்பு 4: அகில இலங்கை இந்து மாமன்றம், சரஸ்வதி மண்டபம், 25, லோரன்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1976. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்).

(4), 76 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 26×21 சமீ.

அகில இலங்கை இந்து மாமன்ற வெளியீடான ‘இலங்கை இந்து’ வின் சிறப்பு மலர் இது. திருக்கேதீஸ்வர மண்டலாபிஷேகம் 21.8.1976 இல் நடைபெற்றவேளையில் இம்மலர் வெளியிடப்பட்டது. திருக்கேதீச்சரப் பெருமான் திருவடிகளே சரணம், திருக்கேதீச்சரப் பெருமான் திருவடி தீண்டப்பெற்றோர், திருக்கேதீச்சுவரர் சூசகம், திருக்கேதீச்சரம், திவ்ய ஷேத்திரம், கௌரியம்மை துதி, ஈழத்தில் சிவ வழிபாட்டின் தொன்மை, திருக்கேதீச்சரத் திருப்பணியும் சேர். கந்தையா வைத்தியநாதனும், வேண்டுகோள், ஸ்ரீதிருக்கேதீஸ்வரநாதர் திருவிருத்தம், திருக்கேதீஸ்வர நினைவுகள், பல்லாண்டுக்கொரு பரவசம், சிவபாதசுந்தரரும் திருக்கேதீச்சரமும், பிள்ளையார் வழிபாடு, எண் உருவானவன், பிற்காலச் சோழப் பெருமன்னர் காலத்துச் சமய வளர்ச்சி, கண்டுகொண்டேனே, கடவுள் உண்மை, திருக்கேதீச்சரம் ஆலயத்தின் தொன்மையும் பழமையும், திருக்கைலையும் அடியார் திருவுள்ளமும், நாவுக்கரசரின் பக்தி வைராக்கியத்தைப் புலப்படுத்துவது, கோணேசர் ஆலய வரலாறு, அரன் அமரும் ஆவிடையார், கற்கோயிலே அணுசக்தியின் பிறப்பிடம், ஈழநாடும் சைவசித்தாந்தமும், பிறவிப் பயன், புதுப்பிறவி, கற்பு நிலைமை, நாகநாதரே நல்லருள் புரிவாய், தமிழகத்துத் தவ நூலுக்கோர் தனிப்பெரும் ஆராய்ச்சியுரை, உய்வாய் மனனே, மண்டலாபிஷேக பூர்த்தியும் மகாபிஷேகமும், நமது தர்மம், திருக்கேதீச்சர கும்பாபிஷேக மங்கல வாழ்த்து, உலகம் வாழ உதவும் உயர்ந்த பணி ஆகிய 35 தலைப்புகளின்கீழ் ஆக்கங்கள் பல்வேறு அறிவுசார் பிரமுகர்களால் எழுதப்பட்டு இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13381).

ஏனைய பதிவுகள்