12100 – உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோவில் புனராவர்த்தன மகாகும்பாபிஷேக விழாமலர்.

மலர்க் குழு. உரும்பிராய்: திருப்பணிச்சபை வெளியீடு, உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1973. (சுன்னாகம் திருமகள் அழுத்தகம்).

(20), 60 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 215×18.5 சமீ.

பல்வேறு இந்துமதப் பிரமுகர்களின் வாழ்த்துச் செய்திகளுடன், விநாயகர் வழிபாடு (பொன்.கிருஷ்ணபிள்ளை), ஒரு இரகசியம் பரம இரகசியம் (செ.தனபாலசிங்கன்), கர்மபரிகாரம் (சி.கணபதிப்பிள்ளை), கருணாகர கணேச அவதாரம் – கந்தபுராணம், உரும்பராய் கருணாகரப் பிள்ளையார் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலைமகள் ஆசிரியர், வாகீச கலாநிதி, கி.வா.ஜெகந்நாதன் அவர்களால் பாடப்பெற்ற கருணாகரன் புகழ்மாலை, பிள்ளையார் சுழி (ச.தண்டபாணி தேசிகர்), பல்லவர் காலச் சமய எழுச்சியும் தமிழ் இலக்கியச் சமய வளர்ச்சியும் (சு.வித்தியானந்தன்), ஆலயம் (திருமுருக கிருபானந்தவாரியார்), கருணாகர கணேச அவதாரம் – கந்தபுராணம், சைவ வாழ்வு (பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி), உரும்பராய் ஸ்ரீ கருணாகரக் கணபதி – திருப்பதிகம் (சீ.விநாசித்தம்பி), கும்பாபிஷேக மகிமை (தி.கி.சீதாராம சாஸ்திரிகள்), கருணாகரக் கணேசனே குடமுழுக் காடியருளே (செ.சிவப்பிரகாசம்), உரும்பராய் கருணாகரப் பிள்ளையார் கோயிலிலுள்ள கல்வெட்டுக்கள் (கார்த்திகேசு இந்திரபாலா), வளர்க கருணாகரன் புகழே (சாரதா), அப்பர் தேவாரத்தில் அரிய சில சொல் வடிவங்கள் (சொ.சிங்காரவேலன்), உரும்பராய் கருணாகரப் பிள்ளையார் கும்பாபிஷேக வாழ்த்துப்பா – நீர்வையூர் பண்டிதர் நீ.சி.முருகேசு அவர்கள் சொல்லியவை, உரும்பராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் வரலாறும் மகத்துவமும் (அ.பஞ்சாட்சரம்), உரும்பராய் கருணாகரப் பிள்ளையார் திருவூஞ்சல் ஆகிய ஆக்கங்களை இச்சிறப்பிதழ் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39840. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008656).

ஏனைய பதிவுகள்

14278 நீதியரசர் பேசுகிறார் (தொகுதி 1).

க.வி.விக்னேஸ்வரன். லண்டன்: சு.னு.இரத்தினசிங்கம், இல. 5, Cawdor Crescent, London W7 2DB, 1வது பதிப்பு, ஜுன் 2018. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356யு, கஸ்தூரியார் வீதி). ஒ, 432 பக்கம், விலை:

12039 மெதொடிஸ்த சபையாரின் தேவாராதனை ஒழுங்கு.

மெதொடிஸ்த சபை. யாழ்ப்பாணம்: மெதொடிஸ்த சபை, 1வது பதிப்பு. 1935. (யாழ்ப்பாணம்: அமெரிக்கன் சிலோன் மிஷன் பிரஸ், தெல்லிப்பழை). (4), 89 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×11 சமீ. Methodist Church Prayer

Free Position Currency

Blogs + 3 hundred Free Revolves On top! How can Playthrough Standards Work on Greeting Incentives? Speak about The new Wagering Words The newest minute/maximum

12985 – தீவகம்: தொன்மையும் மேன்மையும்.

கார்த்திகேசு குகபாலன். யாழ்ப்பாணம்: பேராசிரியர் கா.குகபாலன், 26ஃ2, சம்பியன் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). xiii, 336 பக்கம்,