12101 – கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி வரசித்தி விநாயகர் புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக மலர்.

த.இராஜதுரை, அ.பிரபாகரன் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு 6: எஸ்.பிரின்ட், 4C-1,Fussells Lane).

80 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21 சமீ.

இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (Ramanathan Hindu Ladies College) கொழும்பில் அமைந்துள்ள ஒரு இந்துப் பெண்கள் பாடசாலை ஆகும். 1981 ஜனவரி 19 அன்று 26 மாணவிகளுடனும் 2 ஆசிரியர்களுடனும் கொழும்பு, பம்பலப்பிட்டியில் ஆர். ஏ. டீ. மெல் மாவத்தையில் (முன்னைய டூப்ளிகேஷன் வீதி) தொடங்கப்பட்டது. இது 2006ஆம் ஆண்டில் 89 ஆசிரியர்களையும் 2000 மாணவிகளையும் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கான நிலத்தை அன்றைய புதிய கதிரேசன் கோவிலின் தர்மகர்த்தாவான பழனியப்பச் செட்டியார் கோவில் நந்தவனத்தின் ஒரு பகுதியை கல்வித் தேவைக்கு என ஒதுக்கினார். மேற்படி பாடசாலை சுற்றாடலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததும் மாணவ சமூகத்தால் வணங்கப்பெற்று வந்ததுமான வரசித்தி விநாயகரின் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் 28.10.2002 அன்று நிகழ்ந்ததையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34503).

ஏனைய பதிவுகள்

Paypal Casino en ligne

Meilleurs casinos en ligne Jeux de casino en ligne Paypal Casino en ligne Will is an experienced freelance journalist specializing in video game reporting, with