12107 – திருக்கோணமலை இராமகிருஷ்ண சங்க ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர்.

சிவயோகநாதன் பிரேம் ஆனந்த் (இதழாசிரியர்). திருக்கோணமலை: இந்து மாணவர் மன்றம், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (கொழும்பு 14: போகய்ன்வில்லா (Bougainvilla) பிரின்டர்ஸ்).

(20), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகளுடன் பாடசாலை இந்து மாணவர் மன்றத்தின் அறிக்கைகளையும் கொண்டுள்ள இம்மலரில் விநாயகப் பெருமானும் கல்லூரியும், கும்பாபிஷேகம் ஒரு விளக்கம், ஆலயப் பிரதட்சணம், புண்ணியப் பூமியில் இன்னுமோர் ஆலயம் திருக்கோணமலை மாவட்டத்தில் விநாயகர் வழிபாடு, விநாயகர் வழிபாட்டுத் தொன்மையும் சிறப்பும், ஆலய வழிபாடும் நாமும், ஆலய அமைப்பும் சிற்ப சாஸ்திரமும், அந்தரங்க சுத்தி, விநாயகர் வழிபாடு, மனம் கவர்ந்த மூவர், பிள்ளையார், இசையும் கலையும், காணாபத்தியம், விநாயக விரதங்கள், சொல்லாததும் இல்லை இல்லாததும் இல்லை, இறைவன் இசை-ஆலயம், பழந்தமிழர் பண்டை நடுகல் வழிபாடு, அன்பு வழிகாட்டும் எமது சமயம், விரதம் என்பது மனக்கட்டுப்பாடே, பாடசாலையில் சமயக் கல்வி, இந்து மதத்தின் நாகரிகம், சைவ சமய சின்னங்கள், சந்ததமும் இணைந்து பணி வோம் ஆகிய தலைப்பிலான ஆக்கங்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24591).

ஏனைய பதிவுகள்

12097 – அளவெட்டி-நாகேஸ்வரம் ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம் ஸ்ரீ நாகவரத நாராயணர் சித்திரத்தேர் மலர்.

விநாசித்தம்பி சிவகாந்தன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம், அளவெட்டி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). (6), 40 பக்கம், விளக்கப்படங்கள்,

14824 அமுத மழை.

ஜயசேன ஜயக்கொடி (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).