1999. வே. வரதசுந்தரம் (மலர் ஆசிரியர்). தம்பலகாமம்: அறங்காவலர் அவை, ஆதிகோணநாயகர் கோயில் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜுன் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
68 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 25×17 சமீ.
21.4.1999 அன்று மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்ட திருத்தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிற் பணிகளுக்கென வழங்கப்பட்ட வாழ்த்துச் செய்திகள், ஆதிகோணநாயகர் கோயில் வரலாறு, மற்றும் சைவ சமய அறிவூட்டும் படைப்பாக்கங்களைக் கொண்டதாக இம்மலர் 06.06.1999 அன்று வெளியிடப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48866).