12110 – திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர்.

எஸ். திருச்செல்வம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: எஸ்.திருச்செல்வம், தலங்காவற் பிள்ளையார் கோவில், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: முரசொலி அச்சகம்).

(52) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ.

மேற்படி கோவிலில் 17.6.1988இல் நடைபெற்ற சம்புரோஷண மகாகும்பாபிஷே கம், 03.08.1988 அன்று பூர்த்தியாகிய மண்டலாபிஷேகம் ஆகியவற்றின் நினைவாக இக்கும்பாபிஷேக மலர் முரசொலி ஆசிரியர் எஸ்.திருச்செல்வம் அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இம்மலரில் சிறப்புக் கட்டுரைகளாக காலந்தோறும் விநாயகர் வழிபாடு (ப.கோபாலகிருஷ்ணன்), யாழ்ப்பாணத்து இந்து மக்களிடையே சமூக மேனிலைப்பாட்டு அசைவியக்கமும் வழிபாடும் (கார்த்திகேசு சிவத்தம்பி), கணபதி (கா.கைலாசநாதக் குருக்கள்), கோயில் வரலாற்றுக் குறிப்புகள் (எஸ்.திருச்செல்வம்), விநாயகர் பரத்துவம் (சிவஸ்ரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்), தலங்காவலான் அற்புத விநாயகன் (நா. சண்முகரத்தினக் குருக்கள்), பிணி தீர்க்கும் பிள்ளையார் (சதா யோகீஸ்வரக் குருக்கள்) ஆகிய ஏழு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9372).

ஏனைய பதிவுகள்

14314 தேச வழமைச் சட்டம் .

செல்வநாயகம் அருட்குமரன் (தொகுப்பாசிரியர்). புத்தூர்: கலைக்குயில் கலை வட்டம், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). vii, 33 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.,