மலர் ஆக்கக் குழு. மாவத்தகம: ஸ்ரீ சகலபுவனநாயகி அம்மன் ஆலயம், டெனவர் தோட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(138) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.
ஆசியுரைகள், அன்னை மகமாரிக்கு வாழ்த்துப்பா, ஆலய திருப்பொன்னூஞ்சல், ஆலய வரலாறு, கடந்தகாலத்தில் -ஒரு கண்ணோட்டம், கவிதை இதழ், கட்டுரைப் பகுதி, நினைவின் நிழல்கள் ஆகிய அம்சங்கள் இம்மலரை அலங்கரித்துள்ளன. 25.3.2005இல் வெளியிடப்பட்ட இம்மலரின் மலர் ஆக்கக் குழுவின் கௌரவ ஆசிரியராக அருட்கவியரசு கண்மணிதாசன் (ஏரூரான்) அவர்களும் உதவி ஆசிரியர்களாக ஓவியர் கவீந்திரன், வெற்றித் திருமகள், சசிகுமார் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39920).