12118 – அகண்டாகார அருணாசல அருவி: நல்லைக்குகன் அழகு மதுரம்.

ஸ்ரீமத் அருணாசலம் சுவாமிகள். கொழும்பு 6: டாக்டர் கே.கிருஷ்ணானந்தசிவம், ஸ்ரீ சிவகுருநாத பீட அறக்கட்டளை, 501, லாண்ட்மார்க் கோர்ட், 33, ருத்திரா மாவத்தை, வெள்ளவத்தை, 3வது பதிப்பு, ஜனவரி 2017, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

114 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

இந்துசமயம் சார்ந்த 51 அழகு தமிழ்ப் பக்திப் பாடல்களை இந்நூல் உள்ளடக்கி யுள்ளது. விநாயகர் துதி, விஸ்வநாதம், சிவசிவ சிவோகம், மாமருந்தே, தாளை ஐயனே, வாலறிவுடை மகான்களுக்கு வணக்கம், ஏகம் நான், பூரணன் நீ, ஏகமே பிரம்மமே, ஆழ மூழ்கு மனமே ஆழ மூழ்கு, உள்வாங்கு மனமே, ஜீவ பிரம்ம ஐக்கிய சொரூபம், கற்பகத் தாயே, தேவி திருமுகம், வாணி சரஸ்வதி பாரதி, புதுயுக கதிர்கள் சொரிவாய், பாரதி சரணம், வெங்கட ரமணா பூரணப் பொருளே, சைவன் இந்து யார்?, வைஷ்ணவன் யார்?, ஒளியே வழிகாட்டுவாய், இறைவா எனக்கோர் ஆசை- சித்திக்க வேண்டித் தொழுவேன், ஞான வரம்பே-மஹா மௌனம், நல்லைக்குகனே அழகு மதுரம், நல்லூர் அப்பனே, தேர் ஏறி வாறான் முருகன், வரவேணும் வரவேணும், வீரத்தின் விளக்கம், மெழுகாய் உருகி, உனையல்லால், என்தலைவன் முருகன் என இன்னோரன்ன தலைப்புகளில் இப்பக்திப் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்