சந்தனா நல்லலிங்கம். கொழும்பு 4: சந்தனா நல்லலிங்கம், 9, பாலாம்பிகை நமசிவாய இல்லம், மிலாகிரிய அவென்யூ, 1வது பதிப்பு, மே 2017. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
110 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15
சமீ. விநாயகர் வழிபாடு, விநாயகர் பேரில் பஞ்சரத்தினம்-தம்பையா சரித்திரம், சிரித்தனர் பொன்னம்பலவாணேசர், கொழும்பு நகர் கூத்தபிரான் ஆடினார் ஊஞ்சல், திருவண்ணாமலை வழிபாடும்-திருக்கோணமலைக் குறிப்புகளும், திருவண்ணாமலை அருணாசலேச்சரர் மீது பாடப்பட்ட பதிகம், மட்டுநகர் தாமரைக்கேணி மாரியம்மன், தாமரைக்கேணி மாரி அம்மன் விழா அகவல், கதிர்காமக் கந்தனின் திருத்தலம், கதிர்காமக் கந்தன் காவடி விருத்தம், கதிர்காம முருகன் பேரில் பாமாலை, செல்வச்சந்நிதியை வழிபடும்போது, செல்வச்சந்நிதி முருகன் பேரில் கிளித்தூது, மண்டூர் முருகன், மண்டூர் முருகன் பாமாலை, நீலமேனி நெடுமால் வழிபாடு, திருமாலின் அவதாரங்கள் விருத்தப்பா, அச்சுதாஷ்டகம் ஆதி சங்கரர் அருளியது, சபரிமலை ஐயப்பன் சந்நிதானத்தில், சரணம் ஐயப்பா வழிநடைப்பாடல், முதியோர் இல்லங்களில் இறைவணக்கத்தின் போது, வாழ்த்துக்கள் ஆகிய தலைப்புகளில் ஆசிரியரின் 22 அனுபவ ஆக்கங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 261511CC).