விழிசைச் சிவம் (இயற்பெயர்: செ.சிவசுப்பிரமணியம்). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (யாழ்ப்பாணம்: போஸ்கோ பதிப்பகம், நல்லூர்).
(8), 70 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20×14.5 சமீ.
விழிசைச் சிவம் அவர்கள் இறைவனின் மீது பாடிய கவிதைகளின் தொகுப்பு இது. தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி நான்மணிமாலை, பொலிகண்டிக் கந்தவனநாதர் திருவிரட்டை மணிமாலை, சாத்தானை ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருவூஞ்சல், நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரப் பெருமான்மீது பாடிய பக்திரசக் கீர்த்தனை, மாவைச் சிலேடை வெண்பா (பிற்சேர்க்கை), தச்சன் தோப்புச் சிந்தாமணி விநாயகர் திருவிரட்டை மணிமாலை, இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் மும்மணிக் கோவை, இணுவில் கந்தசுவாமி திருவிரட்டை மணிமாலை, இணுவில் சிவகாமியம்மை திருவிரட்டைமணி மாலை, தெல்லிப்பழை கோயிற்புலச் சிவபெருமான் திருவூஞ்சல், கும்பழாவளை விநாயகர் திருவிரட்டை மணிமாலை ஆகிய பதினொரு பக்தி இலக்கியப் படைப்பாக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது.