12126 – எனது வாழ்வில் சாயிபாபா: முதலாம் பாகம்.

மங்களவதி சிவநாயகம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 13: மகளிர் அணி, கொழும்பு ஸ்ரீ சத்தியசாயி பாபா நிலையம், மோடி மண்டபம், 1வது பதிப்பு, நவம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(3), 173 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இந்நூல் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் அடியார்களின் பார்வையில் தாம் சாயிபாபா மீது நம்பிக்கை வைக்கக் காரணமாயிருந்த சம்பவங்கள், அதிசயங்கள் என்பவற்றை பதிவுசெய்து பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்துள்ளது. அற்புத புருஷர் சாயிநாதர், சாயி சங்கல்பத்தால் பிரசாந்தி பிறந்த கதை(வி.விக்னேஸ்வரன்), திக்குத் தெரியாமல் தவித்த எங்களுக்கு வழிகாட்டியாக வந்தார் பகவான் (மாஸ்டர் சிவலிங்கம்), ஏற்காட்டில் இழந்த பாஸ்போர்ட் எழும்பூர் லாட்ஜ் வந்து கிடைத்தது (கே.லக்ஷ்மணன்), நான் ஒரு டாக்டராவதற்கு சாயிபாபா புரிந்த அற்புதம் (B.ஜானகி), டாக்டர் கைவிட்ட கணவரை ஒரே இரவில் சுகமாக்கினார் பாபா (ஏ.செல்லத்துரை), தொலைந்த சாவிக்கொத்தைக் கூடத் தேடிக்கொடுப்பவர் சாயிபாபா (D.ஈஸ்வரன்), அந்த உருவத்தில் அந்த நேரம் வந்து எங்களுடன் பேசியவர் யார்? (வை.ஸ்ரீஸ்கந்தராஜா), சொல்லாமலே அறிந்தார் என்னைச் சொஸ்தமாக்கினார் (S.N.உதயநாயகன்), ரயில் விபத்து இனக்கலவரம் இரண்டிலிருந்தும் காப்பாற்றினார் (D.ராஜேஸ்வரி), பாபாவின் காலடியில் என் கணவர் சரணடையக் காரணமான சம்பவம் (ஆர்.ராஜலட்சுமி), பழுதுபட்ட காரைத் திருத்த ஆள் அனுப்பியவர் யார்?(எம்.கண்ணன்), அலங்கார மலர்களின் மூலம் என்னுடன் பேசும் சாயிபாபா (சீ.எஸ்.ராஜேஸ்வரன்), 27 வருடமாக வருத்திய வயிற்றுவலி பாபா பஜனையால் பஞ்சாய்ப் பறந்தது (எஸ். வடுகையாப்பிள்ளை), சேலை தந்த பகவான் அதை உடுத்தவும் சொன்னார் (T.சோமசுந்தரம்), அற்புதங்களை நம்பாத நான் எப்படிச் சாயியிடம் சரணடைந்தேன் (வீ.செல்வரத்தினம்), சங்கிலியை அறுத்த திருடன் திகைத்து ஓடி மறைந்தான் (ஆர். புவனேஸ்வரி), அறுவைச் சிகிச்சை இன்றியே இருதயக் கோளாறு அகன்றது (ஆர்.ராஜ்பவன்), காணாமல் போன பத்திரத்தைக் கண்டெடுத்து வைத்தவர் யார்? (S.மனோன்மணி), வலியவே வந்து என்னை ஆட்கொண்ட சாயிபகவான் (S.B.ஐயர்), தடைபட்ட திருமணத்தில் தாலி ஏறிய புதுமை (ஜீ.ஜீவரட்ணம்), திருமணம் நிச்சயமாவதற்கு சாயி பகவான் புரிந்த அற்புதம் (எஸ்.சண்முகசுந்தரம்), இப்படி ஓர் அற்புதம் நடந்ததைச் சொன்னால் யார் நம்புவார்கள்? (D.ஜானகி இந்திரஜித்), கொலையாளியின் துப்பாக்கியை திசைதிருப்பினார் அவர் (என். மோதிலால் நேரு), தேடிய வரனை அவரே வீடுதேடிவரவைத்தார் (வி. சொக்கலிங்கம்), அவர் என்னைப் பின்தொடர்ந்து அவதானித்து வந்தாரா? (விமலநாக), ஆற்றில் மூழ்கி இறந்தவரை கரையில் எடுத்து உயிர்தந்தார் (S.T.சிவநாயகம்), Did He follow Watching me all the way right from the Bank? (Hemantha)) ஆகிய அனுபவப் பகிர்வுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22021).

ஏனைய பதிவுகள்

14852 நுண்பொருள்: அறம்-பொருள்-காமம்.

தேவகாந்தன். தெகிவளை: அகம் வெளியீடு, 29/28-1/1, சிறீ சரணங்கரா தெரு, 1வது பதிப்பு, மார்ச் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). viii, 126 பக்கம், விலை:

12595 – உயர் தர மாணவர் பௌதிகம் : ஒளியியல் .

அ.கருணாகரர். யாழ்ப்பாணம்: சிறீ சுப்பிரமணிய பொத்தகக் களஞ்சியம், 235, காங்கேசன்துறைச் சாலை, 2வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: சிறீ சுப்பிரமணிய அச்சகம், 63, டீ.யு. தம்பி ஒழுங்கை). (4), 224 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

14581 எதனை வேண்டுவோம்: கவிதைத் தொகுதி.

சுமதி குகதாசன். கொழும்பு 6: ஆர். ஜனாதன், 28, 4/2, பசல்ஸ் லேன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (கொழும்பு 6: ஆர்.எஸ்.டி. என்டர்பிரைசஸ், 114, W.A.சில்வா மாவத்தை). (18), 19-77 பக்கம், விலை:

12154 – தெய்வீகம் மலரும் பொழுது.

மு.க.சிவபாதவிருதயர். வவுனியா: பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையம், சாந்தம், பிரசாந்தி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). (4), 181 பக்கம்,

12662 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1976.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).