க.குருமூர்த்தி ஐயர். வட்டுக்கோட்டை: க.குருமூர்த்தி ஐயர், கண்ணலிங்கேசுர சுவாமி கோவில், 1வது பதிப்பு, தாது வருடம், கார்த்திகை 1936. (யாழ்ப்பாணம்: செந்தமிழ்ப் பரிபாலன யந்திரசாலை, வண்ணார்பண்ணை).
(5+4), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.
கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிய கந்தபுராணம் மிக விரிவானது. இதனைச் சுருக்கி கந்தபுராணம் முழுவதையும் எளிமையாக விளக்கும் வகையில் ‘கந்தபுராணச் சுருக்கம்’ என்ற பெயரில் சம்பந்தசரணாலய சுவாமிகள் உரை நடையில் எழுதியிருந்தார். அந்த நூலைத்தழுவி குருமூர்த்தி ஐயர் இந்நூலை இன்னும் சுருக்கமாகவும், இளையோரும் வாசித்தறியும் வகையில் எளிமையாகவும் எழுதித் தான் தழுவிய முதல்நூலின் தலைப்பையே இதற்கும் இட்டு வெளியிட்டுள்ளார். பாயிரம், புராணவரலாறு, உற்பத்திக் காண்டம், மகேந்திர காண்டம், யுத்தகாண்டம், தேவகாண்டம், தஷகாண்டம், அசுரகாண்டம் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் சுருக்கி எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 018034).
கந்த புராணச் சுருக்கம். க.குருமூர்த்தி ஐயர். கொழும்பு: ஸரஸ்வதி புத்தகசாலை, 175 செட்டியார் தெரு, 3வது பதிப்பு, 1951, 1வது பதிப்பு, தாது வருடம், கார்த்திகை 1936. (சென்னை 7: தி பிரிமியர் ஆர்ட் பிரஸ், புரசவாக்கம்).
(12), 125 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 17.5×12.5 சமீ.
யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை கண்ணலிங்கேசுர சுவாமி கோவில் யஜமானாகிய குருமூர்த்தி ஐயர் எழுதிய மூலநூலின் புதுக்கிய மூன்றாவது பதிப்பு இது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2925).