12137 – செல்வச் சந்நிதி முருகன் புகழ்மாலை.

அமரர் திருமதி செல்லம்மா பாலசுந்தரம் நினைவுக்குழு. யாழ்ப்பாணம்: அமரர் திருமதி செல்லம்மா பாலசுந்தரம் நினைவுக்குழு, கரணவாய் தெற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2003. (கொழும்பு 12: லீலா அச்சகம்).

57 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14.5×11 சமீ.

கரணவாய் தெற்கு அமரர் (திருமதி) செல்லம்மா பாலசுந்தரம் அவர்களின் அந்தியேட்டியன்று அவர்களின் நினைவாக செல்வச் சந்நிதி அடியார் பெருமக்களுக்கு அமரரின் நினைவுக் காணிக்கையாக 6.11.2003 அன்று சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல் இது. ஜிந்துப்பிட்டி, தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட் வெளியிட்ட முருகன் பாடல் தொகுதியிலிருந்து இப்பாடல்கள் பிரதி செய்யப்பட்டு நூலுருவாக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34944).

ஏனைய பதிவுகள்