12143 – தாயுமான சுவாமிகள் அருளிச்செய்த திருப்பாடற்றிரட்டு.

தாயுமானவர் (மூலம்), ஆறுமுக நாவலர் (பரிசோதித்தவர்). சிதம்பரம்: பொன்னுஸ்வாமி, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 10வது பதிப்பு, மன்மத வருடம் அக்டோபர் 1955. (தமிழ்நாடு: வித்தியாநுபாலன யந்திரசாலை, இல.300, தங்கசாலைத் தெரு, சென்னபட்டணம்).

(18), 242 பக்கம், விலை: இந்திய ரூபா 1-4-0., அளவு: 18×12 சமீ.

தாயுமானவர் சுவாமிகள் அருளிச்செய்த பக்தி இலக்கியங்களான பரிபூரணானந்தம், பொருள் வணக்கம், சின்மயானந்த குரு, மௌனகுரு வணக்கம், கருணாகரக் கடவுள், சித்தர் கணம், ஆனந்தமானபரம், சுகவாரி, எங்கு நிறைகின்ற பொருள், சச்சிதானந்த சிவம், தேசோமயானந்தம், சிற்சுகோதய விலாசம், ஆகாரபுவனம் சிதம்பரரகசியம், தேன்முகம், பன்மாலை, நினைவொன்று, பொன்னை மாதரை, ஆரணம், சொல்லற்கரிய, வம்பனேன், சிவன் செயல், தன்னையொருவர், ஆசையெனும், எனக்கெனச் செயல், மண்டலத்தின் பாயப்புலி, உடல்பொய்யுறவு, ஏசற்றவந்நிலை, காடுங்கரையும், எடுத்ததேகம், முகமெலாம், திடமுறவே, தன்னை ஆக்குவை, கற்புறு சிந்தை, மலைவளர் காதலி, அகிலாண்டநாயகி சந்தவிருத்தம், பெரியநாயகி விருத்தம், தந்தைதாய், பெற்றவட்கே, கல்லாலின், பராபரக் கண்ணி, பைங்கிளிக் கண்ணி, எந்நாட்கண்ணி, காண்பெனோவென்கண்ணி, ஆகாதோ வென்கண்ணி, இல்லையோவென் கண்ணி, வேண்டாவோவென்கண்ணி, நல்லறிவேயென்கண்ணி, பலவகைக் கண்ணி, நின்றநிலை, பாடுகின்ற பனுவல், ஆனந்தக் களிப்பு, அகவல், வண்ணம் என இன்னோரன்ன திருப்பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத் தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25036).

ஏனைய பதிவுகள்

Best Connecticut Casinos on the internet

Articles Minimum 5 deposit casino: Whats An educated Internet casino Greeting Incentive In america? Money back Since the Incentive To 40, 10 Gambling establishment Bonus